சனி, 24 ஜனவரி, 2026

பெண் சிசுக்கொலை: பிரிட்டனில் வீசும் கள்ளிப்பால் வாடை! அசிங்கப்படும் இந்தியர்கள்! இப்படியா பண்றது?

 tamil.oneindia.com -Halley Karthik : லண்டன்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெண் சிசுக்கொலை மற்றும், பெண் சிசு கருக்கலைப்பு அதிக அளவில் இருந்தது. ஆனால், கல்வியறிவு பரவலாக்கப்பட்ட பின்னர், இந்த பிரச்சனை குறைந்தது. கல்வியறிவு காரணமாக பெண் சிசு கருக்கலைப்பு குறைந்திருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கையில், நன்கு படித்து இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்கள்.. ஆண் குழந்தைகளுக்காக.. பெண் சிசுக்களை கருவில் கலைப்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டன் செய்தி ஊடகமான, 'டெய்லி மெயில்' இது குறித்து, ஆய்வு செய்து பிரத்யேக தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 
அதன்படி, பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி பெற்றோர்களிடையே ஆண் குழந்தைக்கான தேவை அதிகமாக இருப்பதால்.. பெண் சிசு கருக்கலைப்பு அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது.



பொதுவாக ஒரு நாட்டில் பாலின விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்கிற அளவில் இருக்கும். பிரிட்டனிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால், கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில்.. பிரிட்டனில் இந்திய தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளின் விகிதம் 100 பெண்களுக்கு 118 ஆண்கள் என அதிகரித்து இருக்கிறது. இது தேசிய சராசரியை விட மிக அதிகம்.

பிரிட்டன் அரசு அதிகபட்சமாக 100 பெண் குழந்தைகளுக்கு 107 ஆண் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால், இந்திய தாய்மார்கள் 118 ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
ஆய்வில் அதிர்ச்சி

இந்த ஆய்வில், இந்திய பெற்றோர்களின் முதல் மற்றும் இரண்டாவது குழந்தைகளின் பிறப்பு விகிதம் இயல்பாகவே உள்ளது. ஆனால், மூன்றாவது குழந்தையின் போது தான் இந்த விகிதம் பெரும் அளவுக்கு மாறுகிறது என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 100 பெண் குழந்தைகளுக்கு 114 ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

Recommended For You
ரூ.15,000 கோடி செட்டில்மென்ட்? உலகின் 4-வது காஸ்ட்லி விவாகரத்தாக மாறிய ஸ்ரீதர் வேம்பு விவகாரம்.!
ஆண் குழந்தைகள்

இதுவே 2023-2024 ஆம் ஆண்டுகளிலும் 2024-2025 ஆண்டுகளிலும் 100 குழந்தைகளுக்கு 118 ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கின்றன. குறிப்பாக மூன்றாவது குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில்.. கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதுவே ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கை விட மிக அதிகமாக இருப்பதற்கு காரணம்.
பிரின்ஸ் சிண்ட்ரோம்

ஆண் குழந்தைகள் குடும்பப் பெயரை தாங்கி செல்பவர்கள் என்றும், பெண் குழந்தைகள் சுமை என்றும் கருதப்படும் பழமைவாத எண்ணங்கள்.. இன்னும் தொடர்வதன் வெளிப்பாடு இப்படி கருக்கலைப்புகள் நடைபெறுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் பிரின்ஸ் சிண்ட்ரோம் என்கிற உளவியல் காரணம் இருக்கிறது. அதாவது, ஆண் குழந்தைகள் மேலானவர்கள் என்ற வளர்ப்பு முறை, அவர்களுக்கு ஒரு வித தனி சலுகையை அளிக்கிறது. கணவன் அல்லது உறவினர்களின் கட்டாயம் பேரில் பெண்கள் கருக்கலைப்புக்கு தள்ளப்படுகிறார்கள்.
பிரிட்டனில் பழமைவாதம்

பிரிட்டன் சட்டப்படி, குழந்தையின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது. ஆனால், பிரிட்டிஷ் மகப்பேறு ஆலோசனை சேவை போன்ற சில அமைப்புகள், பெண் சிசு கலைப்புகளை ஆதரிக்கும் வகையில் பேசி வருகின்றன.

You May Also Like
வீட்டிற்கே வரும் அதிகாரிகள்.. இந்த 33 கேள்விகளுக்கும் பதிலை ரெடியா வைச்சு இருங்க.. ரொம்ப முக்கியம்
சட்டம் என்ன சொல்கிறது?

பிரிட்டன் சட்டத்தில், கருக்கலைப்பு செய்வதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதாவது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கருக்கலைப்பு செய்யலாம். அதே போல, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் கரு கலைப்பு செய்ய முடியும். இந்தப் பட்டியலில் பாலின அடிப்படையில் கருக்கலைப்பு பற்றி குறிப்பிடவில்லை. அப்படியெனில்.. பாலின அடிப்படையில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதம் கிடையாது என்று இந்த அமைப்புகள் வாதம் செய்து வருகின்றன. இது பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு கூடுதல் அட்வான்டேஜ் ஆக மாறிப் போய் இருக்கிறது.
தலைகுனிவை ஏற்படுத்திய இந்தியர்கள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரிட்டனில் வாழும் வங்கதேச மற்றும் பாகிஸ்தானியர் தாய்மார்கள் இடையே இத்தகைய பாலின பாகுபாடு காணப்படவில்லை. அவர்களின் பிறப்பு விகிதம் தேசிய சராசரியான 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்கிற அளவிலே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: