tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சென்னை வேளச்சேரியில் செப்டோ டெலிவரி ஊழியரை குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்து அரிவாளால் இரண்டு பேர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கொலைவெறியுடன் அரிவாளால் வெட்டியதை பார்த்த பொதுமக்கள், கற்களை வீசி இருவரையும் விரட்டியடித்து டெலிவரி ஊழியரை மீட்டனர்.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). இவர் Zepto-வில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பார்த்திபன் வேளச்சேரி ஜேஎன் நகர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்துள்ளனர்.
மேலும் வலியால் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டதும் குடியிருப்பு வாசிகள் ஒரு சேர ஓடி வந்து கற்கள், கட்டைகளை கொண்டு கத்தி, அரிவாள் வைத்திருந்த நபர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பார்த்திபனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தான் அவர்கள் இருவரும் பார்த்திபனை வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இருவரும் அரிவாளால் டெலிவரி ஊழியரை வெட்டியது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கீழே தள்ளி நெற்றி, கை, கால்களில் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக