Uma Pa Se : இந்த "முதுகுல குத்திட்டாங்க" என்பது வழக்கமான அஜித் பட கதை. எந்த படமாக இருந்தாலும் முதுகில் குத்துவார்கள், தலைக்கு துரோகம் செய்வார்கள். அல்லது அப்படி எதுவும் நடக்காவிட்டால் பேட்டிகளில் தல அப்படி சொல்வார்.
தற்போது அதே " முதுகுல குத்திட்டாங்க" ரைட் அப் எல்லாம் தளபதிக்கும் வர தொடங்கியிருக்கிறது.
விமர்சனங்களை எல்லாம் தாண்டி, நன்றாக சோபித்திருக்கவேண்டிய நபர். ஆனால் காக்கா பிரியாணி துண்ணா உன்னிகிருண்னன் குரல் வரும் என்பதுபோல், கூடவே அய்யா ஆதவ் அர்ஜுனரை வைத்திருந்தால் கட்சியை ஸ்வாஹா செய்துவிட்டு சோலி முடித்துவிடுவார் என்று கட்சி ஆரம்பித்த நாள்முதலாக சொல்லி வந்தோம்.
தலைவன தொட்டு பாரு, முடிஞ்சா வாங்கடா பாப்போம், டேய் சி பி ஐ இப்ப எறி பாப்போம் என தனது personal scoreகளுக்காக தவெகவை பகடை ஆக்கினார்.
திமுக, விசிக ..இரண்டு கட்சிகளும் செய்த தவறை விஜயும் செய்தார். ஆதவ் அர்ஜுனா limelight hijacking செய்தார்.
வைகோவைப் போல் விஜய் கண்டெஸ்ட் செய்யாமலேயே ஏய்ப்பார் என்று சொன்னோம்.
கடைசியில் விஜய் நினைத்தாலும்கூட எலெக்ஷனில் நிற்க வழியில்லாத இடத்துக்கு நகர்த்திக் கொண்டுவந்துவிட்டார்கள். இனிமேல் நிற்கவேண்டுமானால் பாஜக என்ன, எங்கு யாருடன் சொல்கிறதோ அங்கு தான் நிற்க முடியும் என்ற stalemate க்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
சென்சார் போர்டை ஸ்டாலின் கண்டித்தார்.
களவாணி படத்தில், கிளைமேக்சில் விமல் " நான் இருக்கும்போதே என் மச்சான் மேல எவன் டா கை வைக்கிறது" என்று வாண்டடாக ஆதரவுகரம் நீட்டினார்.
இதுவரை விஜயிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. சரி ஸ்டாலின் தான் எதிரி, ராகுலுக்காவது ஒரு ஹார்ட்டின் விட்டாரா என்றால் இல்லை. பொங்கலுக்கு ஊருக்கு போறேன் என்று சிபி ஐயிடமிருந்து லீவ் வாங்கி வந்தும் ஒரு கொண்டாட்ட போட்டோ இல்லை.
ஆக, மைக் இருந்தும்கூட அதிக டெசிபலில் கத்திக்கொண்டே இருந்த விஜயை மவுணமாக்கியிருக்கிறார்கள்.
பாஜகவுக்கு அதிமுக, திமுக, தவெக என யாராக இருந்தாலும் ஒன்று தான். ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாக தனது கட்சியை யார் அப்படியே ஒப்புக்குக்கொடுத்திருக்கிறார்கள் என்பது அவரவருக்கே தெரிஞ்ச சேதி.
இன்று இரவிலிருந்து தவெகவின் ஆதவ் படையணி " யார் துரோகி, யார் கருப்பாடு?, யாரால் வீழ்ந்தது கட்சி?" என பல ரைட்டப்களை விடுவார்கள்.
உண்மையில் புஸ்ஸி ஆனந்த்- விஜய் இயல்பான ஒரு duo. அதில் கபடி ஆடி கொம்பு சீவிவிட்ட பெருமை அண்ணன் ஆதவ், பெருந்தமிழர் ஜான் ஆரோக்கியசாமியையே சேரும்.
அரசியலில் எதிரியை முடிவு செய்வது எளிது.
நண்பரை முடிவு செய்வது தான் கடினம்.
ஊரையே நண்பா நண்பி என்றவர், உள்ளிருக்கும் ஒரு குறுக்குசால் ஓட்டுபவரை கண்டுகொள்ளாமல் விட்டது துயரம் தான்.
234 தொகுதியிலும் வேட்பாளர் விஜய் என்றார். ஒரு தொகுதியிலாவது நிற்க விடுவார்களா என்று பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக