மின்னம்பலம் : நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று (நவம்பர் 24) திருமணம் நடைபெற்றது.
குஜராத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மச்சான்ஸ் என்ற சொல்லின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நமீதா அண்மைக் காலமாகப் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நமீதாவுக்குப் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. நமீதா தனது காதலரான வீராவைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான ரைஸா அறிவித்திருந்தார். திருப்பதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் நமீதா - வீராவின் நிச்சயதார்த்தமும், அதன் பின்னர் மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இந்த நிலையில் நமீதா வீரா திருமணம் திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி மற்றும் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் நமீதாவின் திருமணத்திற்கு நேரில் சென்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக