மின்னம்பலம் : உலகின்
முதன்மை தேடுதளமாக திகழ்ந்து வரும் கூகுள் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு
கூகுள் குரோம் என்ற அப்ளிகேஷனை வெளியிட்டது. பயனர்களுக்கு மிக எளிதாகத்
தகவல்களை தேடும் வசதிகளுடன் இந்த அப்ளிகேஷன் வழங்கப்பட்டது.
அதனால் கடந்த ஆண்டு (2016) உலகின் மிக பிரபலமான வலைதள தேடு கருவியாக தேர்வானது. இதற்கு காரணம் கூகுள் குரோமில் உள்ள ஓம்னிபாக்ஸ் (omnibox) என்ற வசதிதான்.< இந்த வசதி வெளியாவதற்கு முன்னர் பயனர்கள் ஒரு தகவலை தேட முயற்சிக்கும் பொழுது நேரடியாக கூகுள் நிறுவனத்தின் தேடு தளத்திற்கு செல்லும். அதிலிருந்து நமக்கு தேவையான லிங்க்கை கிளிக் செய்து தேவையான இணையதளத்திற்கு சென்று தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். அப்போது மற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் இடையே தோன்றும்.
ஆனால் ஓம்னிபாக்ஸ் வசதி வெளியானதில் இருந்து பயனர்கள் முதலில் பயன்படுத்தும் தகவல்கள் குரோமில் சேமிக்கப்பட்டு, பயனர்கள் அதனை மீண்டும் தேடும் பொழுது கூகுள் தேடுதளத்திற்கு செல்லாமல் நேரடியாக அவர்களுக்கு தேவையான இணைய பக்கத்திற்கு செல்ல உதவுகிறது. இதனால் பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் தேடுதள பக்கங்கள் பயனர்களின் கண்களில் படாமல் சென்று விடுகின்றன.
ஆனால் கூகுள் குரோம் வெளியாகி 9 ஆண்டுகளான நிலையில் இதுவரை நடத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் படி கடந்த 9 வருடங்களாக லண்டனைச் சேர்ந்த நான்கு முன்னணி நிறுவனங்கள் தங்களின் தேடுதலை இழந்துள்ளனர்.
பிபிசி
அதன்படி கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தேடுதலில் உச்சத்தில் இருந்த பிபிசி நிறுவனம் இந்த வருடம் ஜனவரியில் 37 சதவிகித தேடல் சரிவினை சந்தித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு இறுதியில் இருந்து இந்த சரிவு தொடங்கியுள்ளது. அதாவது கூகுள் குரோம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தேடுதளத்தை மிஞ்சிய 12 மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
அமேசான்
கடந்த 2012ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த அமேசான் நிறுவனம் இந்த வருடம் 17 சதவிகித சரிவினை சந்தித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தேடுதல்கள் இன்றளவும் அதிகமாக இருந்தாலும், கூகுள் குரோம் தேடுதளத்தின் வளர்ச்சியால் குறைந்தளவு சரிவினை சந்தித்துள்ளது.
ஆட்டோ டிரேடர்
ஆட்டோ டிரேடர் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இந்த வருடம் 50 சதவிகித சரிவினை சந்தித்துள்ளது. கூகுள் குரோம் தேடலே இதற்கு முழுமையான காரணம் என கருத்துக் கணிப்புகள் தெளிவாக விளக்கம் தந்துள்ளன.
ஜான் லெவிஸ்
கடந்த 2013ஆம் ஆண்டு அதிகபடியான தேடல்கள் கொண்டிருந்த ஜான் லெவிஸ் நிறுவனம் இந்த வருடம் 20 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.
இந்த சரிவிற்கு கூகுள் குரோமில் வழங்கப்பட்ட ஓம்னிபாக்ஸ் வசதியே காரணம் என்பது தெளிவாகிறது. கூகுள் தேடல்களில் இந்த மேற்கண்ட நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், இந்த புதிய வசதி அந்த நிறுவனங்களின் விளம்பர வசதிக்கு சிறிது தடையாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.
நன்றி :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக