தினமணி: வேலூர்: பள்ளியில்
ஆசிரியர் திட்டியதால் வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில்
குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது
பணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு பதினொன்றாம் வகுப்பில் பயின்ற
மாணவிகள் ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா ஆவர்.
படிப்பில் இவர்கள் சரியான அக்கறை
காட்டாததன் காரணமாக பள்ளி ஆசிரியர்கள் நால்வரையும் கண்டித்ததாகக்
கூறப்படுகிறது. அத்துடன் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறும்
ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட
நால்வரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உள்ளனர். கிணற்றில் இருந்து
மாணவிகள் நான்கு பேரின் உடலும் மீட்கப்பட்டது.
போலீசார் தற்பொழுது இந்த சம்பவம் குறித்து
விசாரணை நடத்தி வருகிறார்கள். நான்கு மாணவிகள் கூட்டாக தற்கொலை செய்து
கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக