வெள்ளி, 24 நவம்பர், 2017

மம்தா பானர்ஜி : மேற்கு வங்கம் ரவீந்திரநாத் தாகுரின் மண் .. பாஜக இங்கே நிலை பெறமுடியாது

மோடியை வெளுத்து கட்டிய மம்தா பானர்ஜி, கடும் கோபத்தில் மோடி பிரதமர் நரேந்திர மோடியை துக்ளக் என காட்டமாக விமர்சித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
 கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என தொழில்நிறுவனங்களை மிரட்டுகிறீர்கள்; அவர்களோ மேற்கு வங்கத்தை விட்டு நாங்கள் போக முடியாது என அடம் பிடிக்கிறார். ஏனெனில் அவர்களது தொழில் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கான தொழில்துறை திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் தராமல் இருக்கிறீர்கள்?
கருப்பு பண ஒழிப்புக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது அல்ல. இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படுவதை இந்த நாட்டின் நிதி அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை. அதிகரித்த பயங்கரவாதம் நீங்கள் என்ன துக்ளக்கா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திவிட்டோம் என்கிறார்கள். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான் காஷ்மீரில் பயங்கரவாதம் 12% அதிகரித்துள்ளது.


அமைச்சர்களுக்கு பதிலடி பிரதமர் மோடியை இன்று விமர்சிக்க முடிவதில்லை. அப்படி விமர்சித்தால் உடனே அவரது அமைச்சரவை சகாக்கள் போனடித்து ஏன் அப்படி விமர்சனம் செய்தீர்கள்? என்கிறார்கள். அதற்கு, இது என்னுடைய அரசியல் உரிமை. நான் என்ன விமர்சனத்தை முன்வைக்கிறேனோ அதுதான் சரியானது என அவர்களுக்கு பதிலும் தந்துள்ளேன். பழிவாங்கும் அரசியல் இல்லை நான் எந்த ஒரு தனிநபருக்கும் எதிராக அரசியல் செய்கிற நபர் இல்லை.

அரசியல் பழிவாங்குதல் என்பது என்னிடத்தில் இருந்ததும் இல்லை. மேற்கு வங்கம் என்பது விவேகான்ந்தர் மற்றும் ரவீந்தரநாத் தாகூரின் மண். இங்கே பாஜக நிலைபெற முடியாது. டெல்லி பாராமுகம் குஜராத்தில் 47 துறைமுகங்கள் உள்ளன. ஆனால் மேற்கு வங்கத்திலோ 2 துறைமுகங்கள்தான் உள்ளன. இந்தியாவில் இப்போது கூட்டாட்சி நடைபெறவில்லை. சூப்பர் எமர்ஜென்சிதான் நாட்டில் அமலாகியுள்ளது

கருத்துகள் இல்லை: