தினமலர் :நரேந்திர மோடி,மோடி, பிரம்மா, மல்லிகார்ஜுன கார்கே,
3
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாவாக திகழ்கிறார்; பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் எப்போது என்பது அவருக்கே தெரியும் என காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு தவிர்ப்பதாக காங்., கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது: மோடி ஒரு பிரம்மா. அவர் தான் படைக்கும் கடவுள். அதனால், பார்லிமென்ட் எப்போது கூடும் என்பது, அவருக்கு மட்டுமே தெரியும். பிரதமரான உடன், பார்லி., படியை தொட்டு வணங்கி, உள்ளே நுழைந்தார். ஆனால், தற்போது அதற்கு மரியாதை தர மறுக்கிறார். குஜராத் தேர்தலுக்காக ஜனநாயகத்தின் கோவிலை அழிக்கும் செயலில் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக