வியாழன், 23 நவம்பர், 2017

கலைஞரிடம் கேள்வி கேட்ட நடிகர் அஜித் அன்புசெழியன் முன் மண்டியிட்டது ஏன்?

palanivel.manickam.: வடநாட்டு பவேரியா கொள்ளையர்களை பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து திரைப்படம் எடுக்கும் சினிமாத்துறையினர் நம் அருகேயே இருக்கும் இவ்வளவு பெரிய உள்ளூர் கொடூர கந்துவட்டிக்காரனை பற்றி இதுவரை ஏன் ஒரு திரைப்படத்தை கூட எடுக்கவில்லை (அ) எடுக்க முயற்சிக்ககூட இல்லை என்பதே முதலில் நம் மனதில் எழுந்த கேள்வி, இந்த கொடூர கந்துவட்டிக்காரன் ஓபிஎஸ்-ன் பினாமி என்கிறார்களே,அது உண்மையா? இதே கந்துவட்டிக்காரனால் நேரடியாக நடிகர் அஜித்குமார் பாதிக்கப்பட்டதாக இயக்குநர் சுசீந்திரன் சொல்கிறாரே,அஜித் ஜனநாயகத்தை மதிக்கும் கலைஞர் இருக்கும் மேடையிலே தைரியமா எழுந்து பேசியவர் என புகழப்பட்டவர் ஆயிற்றே, ஏன் இதனை வெளியில் பேச மறுத்தார்? சமூகத்தின் புரையோடிய புண்களை மட்டுமே பேசுவது கலை இல்லை,உங்கள் துறை சார்ந்த புரையோடிய புண்களை பற்றியும் பேச மறுப்பது ஏன்?
சமூகத்திற்கு எதிரான எதையும் துணிந்து பேசுவதில் சினிமா எனும் கலை வடிவத்திற்கு பெரும் பங்குண்டு. உங்கள் சினிமா கலையின் முன்னோடி சார்லி சாப்ளின் உலகின் பெருங் கொடுங்கோலன் ஹிட்லரை திரைப்படம் எடுத்து எதிர்த்தவர் என்பதே வரலாறு.

கருத்துகள் இல்லை: