வியாழன், 23 நவம்பர், 2017

வெளியேற்றப்படும் சென்னை குடிசை வாசிகள் .... அப்போலோவும் ஸ்கைலார்க்கும்...

திருமுருகன் காந்தி : குடிசைகளை அகற்றுவதை நியாயப்படுத்தும் அரசும், அதன் ஆதரவாளர்களும் அப்பல்லோ மருத்துவமனை-லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டல்-ஸ்கை வாக் ஷாப்பிங் மால் ஆக்கிரமித்த கூவம், அடையாறு ஆற்றுப்பகுதிகளை கால்வாய்களைப்பற்றி பேசுவதில்லை. குடிசைகளை அடித்துச் செல்லும் வெள்ளம், கார்ப்பரேட் கட்டிடங்களில் அடங்கி ஒதுங்கி ஓடுகிறது. நம் குழந்தைகள் வருடத்தின் பாதியில் பள்ளியிலிருந்து வெளியேறி செல்வ்தை நம்மால் சகித்துக் கொள்ள இயலுமா?...
தினம் தோறும் காலை உணவு, மதிய உணவு எடுக்காமல் 25 கி.மீ பள்ளிக்கூடத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலுமா? 
போட்க்ளப், க்ரீன்வேஸ் சாலை பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் பற்றி கிஞ்சித்தும் பேச மறுப்பவர்களின் மெளனத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள். கோடீஸ்வரரர்கள் தங்கள் பகுதியை விட்டு 30 கிமீ தள்ளி வசிப்பது கடினம் என்பதால் ஏழைகளை 30 கி.மீ தொலைவிற்கு விரட்டுகிறது அரசும், அதிகாரவர்க்கமும்.


பாவம் பணக்காரர்கள் தினந்தோறும் 30 கிமீ பயணித்து பிசினஸ் செய்வது கஸ்டமில்லையா அதனால் தான் ஏழைகள் எழில், கண்ணகி நகருக்கு அனுப்பப் படுகிறார்கள் என்கிறது அரசு.

மொத்தமாக 225,000 ஏழைகள், அதில் பெரும்பான்மை பட்டியலின தலித் மக்கள், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்பதில் தெரியவில்லையா அரசின் சமூக நீதி கொள்கையின் யோக்கியதை.

ஸ்கைவாக், அப்போல்லோ மருத்துவமனையை இடித்து ஆக்கிரமிப்பை அகற்றும் யோக்கியதை உனக்கிருந்தால், குடிசைகள் மீது கை வை.

///தோழர் திருமுருகன் காந்தியின்

கருத்துகள் இல்லை: