வெப்துனியா :மறைந்த முதல்வர் ஜெயலலிதா
மருத்துவமனையில் இறந்து பின்புதான் அவரிடமிருந்து வேட்புமனுவில் கையொப்பம்
பெறப்பட்டுள்ளது என திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன் ஆதாரத்துடன்
கூறியுள்ளார்.";ஜெ.வின் கைரேகை குறித்து சந்தேகம் எழுப்பிய திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய
அவர் “அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்ட போது காய்ச்சல் மற்றும்
நீர்ச்சத்து குறைபாடுகள் காரணமகவே அவர் அனுமதிக்கப்பட்டார் என குறிப்பில்
எழுதப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் சுயநினைவின்றியே அங்கு அனுமதிக்கப்பட்டார்
எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி பல முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றத்தில்
சுட்டிக்காட்டினோம்.
<>மேலும், பொதுவாக உயிரோடு உள்ள ஒருவரின் கைரேகை வரிவரியாக இருக்கும். ஆனால், ஜெ. வின் கைரேகையில் எந்த வரிகளும் இல்லை. அது உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இறந்தவர்களின் கை கைரேகைகள்தான் அப்படி இருக்கும். எனவே, ஜெ. இறந்த பின்பே வேட்புமனுவில் கைரேகை எடுக்கப்பட்டுள்ளது.">அப்படிப் பார்த்தால் அவர் 27.10.2016 அன்றே இறந்திருக்க வேண்டும். ஆனால், 5.12.2016 அன்று இறந்ததாக மருத்துவமனை அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான ஆதாரங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக