அப்போது ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே.தவே போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல தற்போதும், ஆளுநரின் ஆலோசகராக ஓ.ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையறிந்த ஆளும் தரப்பினர்கள் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படி கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளிதழில் செய்தி வெலியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்காக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.;
அதேபோல், அமைச்சர் ஜெயகுமார், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக