மின்னம்பலம் :“இரட்டை இலை பழனிசாமிக்கு கிடைத்துவிட்டது. அதிமுக அலுவலகம் , ஜெயலலிதா
சமாதி எனத் திரும்பிய பக்கமெல்லாம் பழனிசாமி, பன்னீர் ஆதரவாளர்கள் லட்டு
கொடுத்தபடி இருக்கிறார்கள். இலை கிடைத்தது முதல், கொண்டாட்டம் வரை எல்லாம்
மின்னம்பலம் செய்திகளில் இருக்கும். அதனால், தினகரன் தரப்பு நடவடிக்கைகளை
நான் சொல்கிறேன்.
எடப்பாடி அணிக்கு இரட்டை இலை கிடைத்துவிட்டது என்ற தகவல் வந்ததுமே தினகரன் செம அப்செட் ஆகிவிட்டாராம். தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ. ஒருவருக்கு போன் போட்டு, ‘என்னோட நம்பிக்கையே இரட்டை இலையாகத்தான் இருந்துச்சு. இப்போ அதுவும் கைவிட்டுப் போயிடுச்சு...’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம். அதன் பிறகு தினகரனிடம், எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசி இருக்கிறார்.
‘நீங்க இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. இதெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும். மோடி கையில ஆட்சி இருக்கும் போது நமக்கு எப்படி இலை கிடைக்கும்? பார்க்கலாம் அந்த சின்னத்தை வெச்சுகிட்டு அவங்களால் என்ன பண்ண முடியும்னு? நம்ம பவரை காட்ட இப்போ நமக்கு கிடைச்சிருக்கும் ஒரே வாய்ப்பு ஆர்.கே.நகர் தேர்தல்தான்.
அந்த தேர்தலில் உங்களுக்கு மறுபடியும் தொப்பி சின்னம் கேட்டு வாங்கலாம். தொப்பியை வெச்சு மறுபடியும் நாம ஒரு ரவுண்ட் வருவோம். இதே தொப்பியை தூக்கிட்டுதானே இப்போ இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் அலைஞ்சாங்க. அந்தப் போட்டோவை எல்லாம் ஆர்.கே நகர் தொகுதியில் இருக்கும் செல்போன் நெம்பர்களுக்கும் வாட்ஸ் அப் பண்ணிவிடலாம். அவங்க நிறுத்துற வேட்பாளரைவிட, நீங்க அதிக ஓட்டு வாங்கி காட்டியாகணும். நம்ம டார்கெட் அதுவாகத்தான் இருக்கணும். அதை நோக்கி நாம வேலைகளை பார்க்க ஆரம்பிப்போம்’ என்று சொன்னாராம்.
அதற்கு டிடிவி, ‘ஆர்.கே.நகரில் சின்னமும் இல்லாமல் நாம ஜெயிக்க முடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார். உடனே வெற்றிவேல் கொஞ்சமும் தயங்காமல், ‘நாம ஜெயிக்கிறோம் தோற்கிறோம் என்பது முக்கியமே இல்லை. எடப்பாடி ஆளுங்க நம்மைவிட ஒரு ஓட்டாவது கம்மியாதான் வாங்கணும். இதனால திமுக ஜெயிச்சாலும் நாம வருத்தப்பட தேவை இல்லை. உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரு பக்கம் இருக்காங்கன்னு காட்ட நமக்கு கிடைச்ச மிகப் பெரிய வாய்ப்பு இது. ஒரு ஆளுங்கட்சி இடைத் தேர்தலில் தோல்வி அடைஞ்சா. அதைவிட கேவலம் என்ன இருக்க முடியும். அந்தக் கேவலத்தைப் பழனிசாமிக்கும், பன்னீருக்கும் உருவாக்கணும்...’ என மேப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
வெற்றிவேல் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் சகஜநிலைக்குத் திரும்பி இருக்கிறார் டிடிவி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது. “தினகரன் ஆதரவாளரான புகழேந்தி தற்போது பெங்களூருவில்தான் இருக்கிறார். அவரை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நாளை சென்று சசிகலாவை சந்திக்கச் சொல்லியிருக்கிறாராம் தினகரன். ‘இரட்டை இலை கைவிட்டுப் போனதுல சின்னம்மா ரொம்பவும் டென்ஷனா இருப்பாங்க. நீங்க போய் பேசுங்க. நாம என்ன முயற்சிகள் எல்லாம் செஞ்சோம் என்பதை அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில் நான் உடனே வந்து பார்த்தால் சரியா இருக்காது. நீங்க பார்த்துப் பேசிட்டு அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க. அதுக்குப் பிறகு நான் போறேன்...’ என்று சொன்னாராம் டிடிவி.
அதையடுத்து நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் செல்ல அனுமதி கேட்டு வழக்கறிஞர் மூலமாக முயற்சி செய்துவருகிறாராம் புகழேந்தி” என்றது அந்த மெசேஜ்.
“இதெல்லாம் நடக்கும்னு சசிகலாவுக்கு மட்டும் என்ன தெரியாமலா இருந்திருக்கும்? கட்சி கைவிட்டுப் போய்விட்டது என்பதை சசிகலா நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால் சின்னம் போனது வருத்தமாக இருந்தாலுமேகூட, அதிலிருந்து வெளியே வருவது அவருக்குப் பெரிய விஷயமாக இருக்காது. இது எல்லாவறையும் கவனித்தபடி இருந்த விவேக், ‘கட்சி இந்த நிலைக்குப் போனதுக்கு காரணமே டிடிவி தான். இப்போ இரட்டை இலை கைவிட்டுப் போகவும் அவரே காரணம்!’ என்று சொல்லிவருகிறாராம்.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக