செவ்வாய், 21 நவம்பர், 2017

நீதிபதியை விமர்சித்த பெண் கைது!


நீதிபதியை விமர்சித்த பெண் கைது!மின்னம்பலம் : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரனை விமர்சித்து முகநூலில் கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகக் கிருபாகரன் பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு வழக்குகளில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வு, பத்திரப் பதிவு துறை ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இதனால் இவரைச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வது அதிகரித்து வந்தது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருபாகரன் சில கருத்துகளை தெரிவித்ததுடன், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி கேள்விகளை எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி கருத்துக்கு ஆசிரியர்கள் சிலர் விமர்சனம் செய்திருந்தனர். அவ்வாறு விமர்சனம் செய்த 11ஆசிரியர்களைப் பள்ளி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.
இந்நிலையில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியினைச் சேர்ந்த சிவகுமாரின் மனைவி மகாலட்சுமி(41) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி அவரை இன்று (நவம்பர் 21) சத்துவாச்சாரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: