தினமலர் :கந்து வட்டி பிரச்னை குறித்து, நடிகர் கமல்ஹாசன் மவுனம் சாதிப்பது, அத்துறையை சார்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், கமல் கருத்து வெளியிட்டு வருகிறார். தவறுகளை கண்டு பொங்கிய பாரதியாரை போல், டுவிட்டரில், முண்டாசு தரித்த கோலத்தில், தன் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதனால், அவர் சார்ந்த திரையுலக பிரமுகர், கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்த விவகாரத்தில், ஆத்திரம் தெறிக்க பொங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமல், வாய் திறக்காமல் இதுவரை மவுனம் காக்கிறார்.
தேச நேசன் : ஏதோ ஒரேயொரு பைனான்சியரிடம் மட்டும் கடன் வாங்கியவன் அலறுவான் ஆனால் ஊர் முழுக்க கடன் பாக்கி வைத்திருப்பவர்களும் பலபேருக்கு பணம் செட்டில் செய்யாமல் காலம் கடத்துபவர்களும் எப்படி வாயை திறக்கமுடியும் ? ஹே ராம் பட நேரத்தில் வருடக்கணக்கில் பலருக்கு பாக்கிவைத்து நோகடித்தது மறக்குமா?
ஜகன் சென்னை : அவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சு பாதுகாப்பு தேடுவதே நிழல் உலக தாதாக்களிடம் இருந்து தப்பிக்கவே ....2 MLA இருந்தால் பெரிய கட்சியோடு கூட்டணி போட்டு தப்பிக்கலாம் ........ இப்போ புரியுது இவர் ஏன் இப்பிடி பிதற்றுகிறாரார் என்று.... நிஜமாவே பாவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக