பல வருடங்களுக்கு முன்பு மௌனராகம், தளபதி ஆகிய படங்களை தயாரித்த ஜூ.வி தற்கொலை செய்து கொண்டதற்கும் அன்பு செழியன் பெயரே அடிபட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், அவர் அன்புசெழியனிடம் பணம் வாங்கியதாலேயே தான் தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போது திறைத்துனர் அன்பு செழியனுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
நேரடி அரசியலில் அன்பு செழியன் இல்லை என்றாலும், ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனது பணபலம் மூலம் அமைச்சர்களிடம் நெருங்கிவிடுவதை பழக்கமாக கொண்டிருப்பவர் அன்பு செழியன்.
;இந்நிலையில், பணிவிற்கு பெயர் போன அமைச்சரின் மகனுடன் அன்புவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடிக்கணக்கான பணத்தை அமைச்சர் மகன் கொடுக்க,>அன்புசெழியன்.<>அதை கந்து வட்டிக்கு விட்டு, பல கோடி வெள்ளைப்பணமாக மாற்றிக் கொடுத்து வந்துள்ளார் என செய்திகள் உலா வருகிறது
தற்போது அசோக்குமார் தற்கொலை வழக்கில் போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, அமைச்சர் மகனிடம் அன்பு செழியன் உதவி கோர, ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும், விரைவில் அவரின் நபர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
அரசியல் பின்புலம் வலுவாக இருப்பதால், அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் எனவும், விரைவில் இந்த வழக்கில் இருந்து அவர் வெளியேறி, தன் அதிகாரப்போக்கை மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் தொடர்வார் எனவும் நம்பப்படுகிறது.
ஏனெனில், அவர் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அவர் தேவைப்படும் நபராக இருக்கிறார்.
கடமையை செய்யுமா காவல்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக