திங்கள், 20 நவம்பர், 2017

அறிவழகன் அர்ஜுன் சம்பத்தின் உறவினன்... மறைக்கப்பட்ட உண்மை

 அறிவழகன்
Chennai: சென்னையில் சிக்கிய  கிரிமினல் அறிவழகன் மீது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாகப் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், அறிவழகன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் நடந்துசென்ற வில்லியம்ஸ் என்பவரிடம் 8,500 ரூபாய் பணத்தை, கிருஷ்ணகிரி மாத்தூரைச் சேர்ந்த அறிவழகன் vikatan வழிப்பறிசெய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறி, திருட்டு, பெண்களிடம் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழிப்பறி வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில், அறிவழகன் திருடிய வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீறியதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், அறிவழகனை விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "அறிவழகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. திருடச் செல்லும் இடங்களில், தனியாக இருந்த பெண்களை கத்திமுனையில் அறிவழகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், அறிவழகன் திருடிய இடங்களில் உள்ள பெண்களிடம் பெண் போலீஸார் மூலம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது.

 தற்போது, அறிவழகன் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், போலீஸ் உயரதிகாரியைச் சந்தித்துள்ளார். அந்தப் பெண் வீட்டிலும் அறிவழகன் சில மாதங்களுக்கு முன்பு திருடியுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அந்தப் பெண் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி அந்த விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம்.
திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட அறிவழகனை, பாலியல் பலாத்கார வழக்கில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்கான வேலையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அறிவழகனின் அனைத்து குற்றச் செயல்களிலும் அவருடைய கூட்டாளி ஒருவர் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரைத் தேடி வருகிறோம். அவர் சிக்கினால், இந்த வழக்கில் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், அறிவழகன் சொல்லும் பெண் விவகாரத்துக்கும் முற்றிப்புள்ளி ஏற்பட்டுவிடும்" என்றார்.
"அறிவழகனின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாத்தூரில், உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அறிவழகனின் ஆரம்பகால வாழ்க்கை, அவரது குடும்பச் சூழ்நிலைகுறித்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளது. பட்டதாரியான அறிவழகனின் நண்பர்கள் சிலரிடம்  விசாரித்துள்ளோம். அப்போது கிடைத்த தகவல்படி, பெங்களூரில் அறிவழகன் வேலைப்பார்த்த தனியார் கம்பெனியில் விசாரணை நடத்தினோம். அங்கு, அறிவழகன் மீது குறிப்பிடும் வகையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. அடுத்து, பெங்களூரில் அவர் தங்கியிருந்த இடத்திலும் விசாரித்துவருகிறோம். விசாரணை முடிவில் அறிவழகன் குறித்த முழுவிவரம் தெரியவரும்" என்கின்றனர் தனிப்படை போலீஸார்.

 அறிவழகனின் வழக்கைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே போலீஸார் பல தகவல்களை மூடிமறைக்கவே முயன்றனர். அவர், போலீஸில் சிக்கியதும் வழிப்பறி வழக்குத் தொடர்பாகத்தான் விசாரணை நடந்துள்ளது. ஒருகட்டத்தில், அறிவழகனின் சுயரூபம் தெரிந்ததும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து போலீஸ் உயரதிகாரிக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. உடனடியாக தனிப்படை போலீஸாரிடம் அறிவழகன் ஒப்படைக்கப்பட்டார். அதன்பிறகு, அறிவழகன் குறித்த முழு பயோடேட்டாவை சேகரித்த தனிப்படை போலீஸார், உயரதிகாரிகளிடம் தகவலைச் சொல்லியுள்ளனர். அந்தத் தகவல்கள் வெளியானால் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என்று கருதிய காவல்துறையினர், அறிவழகனை தற்போதைக்குத் திருட்டு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டனர். ஆனால், அறிவழகன் குறித்த தகவல் மீடியாக்களுக்குத் தெரிந்ததும், போலீஸாருக்கு அது பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. குடும்ப கௌரவம் கருதி அறிவழகனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் புகார் கொடுக்கலாமா என்ற யோசனையில் இன்னமும் இருக்கின்றனர். ஆனால், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண், அறிவழகன் மீது துணிச்சலாகப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார்குறித்து விசாரணை நடந்துவருவதாக மட்டுமே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அறிவழகனை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல் உள்ளது. ஏனெனில், அவருக்கும் போலீஸ் உயரதிகாரிக்கும் மட்டுமே அறிவழகன் குறித்த முழுவிவரம் தெரியும் என்று சொல்கிறது தனிப்படை போலீஸ் டீம்.

கருத்துகள் இல்லை: