மின்னம்பலம் :தொழிலதிபர்
சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
8ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில்,
99 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளும் 34 கோடி மதிப்பிலான புதிய
ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
100 கிலோவுக்கும் அதிகமாகத் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சேகர் ரெட்டி உள்பட ஆறு பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைக் கடந்த 10ஆம் தேதி விசாரித்த நீதிபதி ரமேஷ், இது தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையில் நீதிபதி ரமேஷ் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை செய்யும்படியும் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக