வெள்ளி, 24 நவம்பர், 2017

அ இ அன்புசெழியன் அண்ணா திமுக ..... மக்களால் நான் மக்களுக்காக நான் ...

Special Correspondent FB Wing :
ராமநாதபுரம் மாவட்டம் பொம்மனேந்தல் கிராமத்தில் இருந்து வெறும் கையேடு மதுரை வந்தான் அன்புசெழியன் . பின்பு சுதாகரன் வழியாக கிடைத்த அதிமுவின் ஆதரவால் கிடுகிடுவென உயர்ந்தான் .
பிரபல இயக்குனர் சசிகுமார் உறவினர் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார், சென்னை வளசரவாக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தனது தற்கொலை கடிதத்தில், ‘சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் தனது தற்கொலைக்கு காரணம்’’ என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அமைச்சரின் சிபாரிசால்தான் போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புச் செழியனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பாப்பானாம்பட்டி. மதுரைக்கு பிழைப்புக்காக அன்புச் செழியனின் குடும்பம் மதுரை கீரைத்துறையில் குடியேறியது.
மதுரையில் தண்டாரா எனப்படும் வேலையை செய்ய ஆரம்பித்த அன்புச் செழியன், 16 வயதில் 1997 களின் ஆரம்பத்தில் 5 ஆயிரம் முதலீட்டில் மதுரையில் சினிமா பெட்டி தூக்கும் நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்க சைக்கிளில் வலம் வந்தார்.
அந்த நபர்கள் மூலமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த திரையரங்குகளில் திரையிடப் படும் சினிமாக்களுக்கு அதன் பெட்டிகளை வாங்க வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

தினசரி ஓடும் படங்களின் வசூலை வட்டியாக அன்புச் செழியனுக்கு கொடுப்பர். இப்படியே மாத வட்டி , வார வட்டி, தினசரி வட்டி, மணிக் கணக்கில் வட்டி, மீட்டர் வட்டி என வட்டிகளை பலவாக பிரித்து கொடுக்க ஆரம்பித்தார் அன்புச் செழியன். குறுகிய காலத்திலே 5 ஆயிரம் ரூபாய் முதலீடு சில லட்சங்களாக உயர்ந்தது. அதன் பிறகு அன்புச் செழியன் அவரே சினிமா பெட்டிகளை வாங்கி மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள தியேட்டர்களில் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். இதன் மூலமும் வருமானம் பெருக ஆரம்பித்தது. அதன் பிறகு சென்னைக்கு வந்த அன்புச்செழியன் சென்னையில் சினிமா கேரவன் ஓனர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்.இப்படித்தான் சினிமா தொழிலில் அறிமுகம் ஆனார்.
முதலில் இரண்டு, மூன்று லட்சங்ளை மட்டும் வட்டிக்கு கொடுக்கும் அன்பு, பணம் வாங்கும் நபர்களிடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான வீட்டுப் பத்திரங்களை வாங்கிக் கொண்டு பத்து வட்டிக்கும், இருபது வட்டிக்கும் பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்தப் பத்திரங்களை வைத்துக் கொண்டு மதுரையிலுள்ள பெரிய புள்ளிகளிடம் மேலும் கூடுதலாக பணம் வாங்கி அதை சென்னைக்கு கொண்டு வந்து 20 லட்சம் முதல் 1 கோடி வரை வட்டிக்கு கொடுத்து வந்தார். அதன் பிறகு அதிமுகவில் ராஜன்செல்லப்பா மூலம் தன்னை இணைத்துக் கொண்டார். அன்புச் செழியன் குறித்து பல்வேறு புகார்கள் குவிந்ததால், மதுரையில் எஸ்பியாக இருந்த அஸ்ரா கார்க் அன்புச் செழியனை உடனடியாக கைது செய்தார்.
அப்போது உளவுத்துறை டிஐஜியாக இருந்த மீசைக்கார அதிகாரி ஒருவர், எஸ்பியை சின்னம்மா சொல்கிறார்கள். உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று சொல்லி மிரட்டியுள்ளார். அதோடு 8 அமைச்சர்கள் அவருக்காக ேபசினர். ஆனால் எஸ்பியோ, அன்புசெழியனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
எஸ்பி அஸ்ரா கார்க் இருக்கும்வரை அன்புசெழியனால், மதுரையில் யாரையும் மிரட்டி பணம் பறிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் அன்புச் செழியனை வெளியில் கொண்டு வர முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருந்த சீனியர் அமைச்சர் ஒருவர் அதிகாரிகளைப் பிடித்து முயற்சி செய்தார்.
அதன்பின் எஸ்பி அஸ்ரா கார்க் மாற்றப்பட்ட பிறகு 2013ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே வழக்கை ரத்து செய்து விட்டனர். அதற்கு விசுவாசமாக அன்புச் செழியன் அந்த அமைச்சரின் மூத்த மகனுடன் இணைந்து வெளிநாட்டில் சினிமா விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுத்து சினிமாவில் பல கோடிகளை முதலீடு செய்யக் கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வித்தையை கற்றுக் கொடுத்தார். அந்த நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
தவிர இருவரும் உறவினர் என்பதால் கடந்த 8 ஆண்டுகளில் இந்த இருவர்தான் தமிழ் சினிமாவை இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
பிறகு ராஜன் செல்லாப்பாவிற்கு எதிரணியில் செயல்பட்ட செல்லூர் ராஜூவின் அணியில் இணைந்தார். இதற்காக மதுரை மாவட்ட அதிமுக இளைஞரணி துணைத்தலைவர் பதவியும் கொடுக்கப்படுள்ளது.
அன்புச் செழியனுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் இருந்தாலும் கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சிகளில் அன்புச் செழியனுக்கு நெருக்கமான முக்கியமான 3 அமைச்சர்கள் களமிறங்கியுள்ளதாக சினிமாத்துறை வட்டாரத்தில் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் மூத்த அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில், தேனியில் உள்ள அவரது பங்களாவில் அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை எப்படி கைது செய்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர்.
சினிமாவில் பணத்தை வசூலிக்க அன்புச் செழியன் 50 க்கும் மேற்பட்ட குண்டர்களை வேலைக்கு வைத்துக் இருக்கிறாராம் . பணம் வாங்க வருபர்களின் வீடு, இடம், நிலம், மனைவி, குடும்ப நிலவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டுதான் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்தில் பணத்தை தரமுயடியாத போது வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் வீடுகளுக்கு முதலில் கும்பலாக சென்று வீடுகளின் முன்புறம் நின்று கொள்வார்களாம்.
இதனால் பதட்டமடையும் நபர் பணத்தை கொடுத்து விடுவார். அப்படியும் பணம் தரவில்லை என்றால் குண்டர்களை விட்டு பணம் வாங்கியவரின் நடு வீட்டில் சிறுநீர் கழிப்பது, மனைவி குழந்தைகளை தூக்குவது என மிரட்டி, இறுதியில்அன்புவின் தம்பி அழகர் நான்கைந்து குண்டர்களோடு சேர்ந்து கடன் வாங்கியவர்களின் மனைவி அல்லது அவர்களின் குழந்தைகளை கடத்தி வந்து அவர்களது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப் படுத்தி அடிப்பார்களாம்
ஆளும் அதிமுக கட்சி ஆதரவை பெற்றதால் அன்பு செழியன் மீது எந்த புகாரையும் கொடுக்காமல் அவமானத்தை சகித்து கொண்டு பல திரைப்பட துறையினர் வாழ்ந்து வருவதாக பிரபல மூத்த இயக்குனர் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டு கொண்டு கொடுத்த நுட்பமான தகவல்களை இவை

கருத்துகள் இல்லை: