வியாழன், 23 நவம்பர், 2017

தோழர் மருதையன் : 1917ஐ மீண்டும் படைப்போம்”


“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு” ” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.

கருத்துகள் இல்லை: