'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள்,
'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில்
சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர்
வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள்
அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட,
இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட,
சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்
கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை
நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள்
உள்ளன.
சசிகலா
கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என, 215 இடங்களில்
நவம்பர், 9ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஐந்து நாட்கள் தொடர்ந்த
சோதனையின் முடிவில், முதற்கட்டமாக, 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி
ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டது.
மேலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துகள்
மற்றும் போலி நிறுவன பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் சிக்கின.தொடர்ந்து, ஜெ.,
உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்ட பலரிடம், வரித்துறை விசாரணை நடத்தியது.
ஜெ., மறைவுக்குப்பின், அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா கும்பல், 25 ஆண்டுகளாக குவித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கி, 'அப்பாடா...' என, நிம்மதி
ஆதாரங்கள் சிக்கின

பெருமூச்சு விட்டிருந்தது.ஆனால், வரி துறையோ, பாகிஸ்தான் மீது
இந்திய ராணுவத்தின், துல்லிய தாக்குதல் போல் குறி வைத்து, 215 இடங்களில்
சோதனை நடத்தியது. இதில், தங்கள் கும்பலின், 'ஜாதகமே' அவர்களிடம் சிக்கியதை
அறிந்து, மன்னார்குடி கும்பல் ஆடிப்போனது.இதைத் தொடர்ந்து, யாரும் சற்றும்
எதிர்பாராத வகையில், போயஸ் கார்டனில், நேற்று முன் தினம் இரவு, வருமான
வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சசிகலா மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளில், இந்த சோதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு துவங்கிய சோதனை,நள்ளிரவு, 1:30 மணிக்கு முடிந்தது. அதில், சசிகலா கும்பல்
வாங்கிக் குவித்த பல சொத்துகளின் அசல் ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன.
போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு, வரித்துறையினர் பல மாதங்களாக சேகரித்த தகவல்கள் ஆதாரமாக இருந்தாலும், சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட்டு, பல விஷயங்களை, 'போட்டு'க் கொடுத்ததும், முக்கிய காரணமாகும்.அந்த, 'ஸ்லீப்பர் செல்'கள் வாயிலாகத்தான், போயஸ் கார்டனில் பதுக்கியுள்ள ஆவணங்களை, வேறு இடங்களுக்கு, சசி சொந்தங்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனால் தான், வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதை வருமான வரித்துறை வட்டாரங்கள் சிலவும், உறுதி செய்துள்ளன.வழக்கமாக, சசி கும்பலைச் சேர்ந்த தினகரன் பேட்டி அளிக்கும் போது, 'பழனிசாமி அணியில்,எங்களின், 'ஸ்லீப்பர் செல்'கள் பதுங்கி உள்ளனர். தகுந்த சமயத்தில், அவர்கள் செயல்படுவர்' என, கூறி வந்தார்.
ஆனால், அவரது கும்பலிலேயே, 'ஸ்லீப்பர் செல்'கள் இருப்பதை கண்டு பிடிக்க தவறி விட்டார்.போயஸ் கார்டன் இல்லத்தில், சோதனை நடந்தபோது, பின்னங்கால் பிடரியில் பட, விவேக் அங்கு ஓடி வந்தார். அதற்கு காரணம், 'மிக பாதுகாப்பான இடம்' என, அங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே காரணம்.
வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.
ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர்

கடத்த திட்டம்

215 இடங்கள்:
அதனால் தான், ஒப்பாரி <
வைக்காத குறையாக, 'அது ஜெ., வாழ்ந்த கோவில்' எனக்கூறி, தினகரன்
ஆதரவாளர்கள், திசை திருப்ப பார்த்தனர். ஆனால், முக்கிய ஆவணங்கள்,
இச்சோதனையில் வசமாக சிக்கிவிட்டன. வருமான வரித்துறையினர், ஒரே நாளில், 215
இடங்களில் சோதனை நடத்தி யதைத் தொடர்ந்து, ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டனிலும்
சோதனை நடந்துள்ளது. அதனால், அடுத்த சோதனை எங்கு நடக்குமோ என, மன்னார்குடி
உறவுகள் கலக்கம் அடைந்து உள்ளன.
சொத்து ஆவணங்கள் பறிமுதல்
வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.
அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐகோர்ட் அனுமதியா?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.
ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக