மாலைமலர் :
தமிழகத்தில் 11 மாவட்டங்களில்
மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி
பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்த காட்சி.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுத்துறைகளை பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?
என்பிஆர் கொண்டு வந்தது காங்கிரஸ். தமிழகத்தில் அமல்படுத்தியது திமுகதான். என்பிஆரில் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என தெளிவுபடுத்தி விட்டார்கள்.
எந்த துறையில் முறைகேடு செய்திருத்தாலும் அதில் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அதிமுக மூலம் விலாசம் பெற்றவர்கள் துரோகம் செய்தால் முகவரி தெரியாமல் போய் விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். மேலும் “வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதுபோல் கூட்டணி கட்சியினரும் சீட் கேட்பார்கள்தான்” என தேமுதிக மாநிலங்களவை எம்பி சீட் கேட்பது குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக