புதன், 4 மார்ச், 2020

10 வங்கிகளுக்கு பதிலாக இனி 4 வங்கிதான்.. வங்கிகள் இணைப்பு .. நிதி சர்வாதிகாரம் ...கேபினெட் ஒப்புதல்

ஏப்ரல் 1 Veerakumar - /tamil.oneindia.com : டெல்லி: 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில், இன்று, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இணைப்பு திட்டத்தை வங்கிகள் சமர்ப்பித்துள்ளன, அவற்றுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்
இணைப்புக்குப் பிறகும் ஒவ்வொரு வங்கி சேவையும் அப்படியே இருக்கும். மாற்றங்கள் கிடையாது. இந்த இணைப்பு அமல்படுத்தப்படும் தேதி ஏப்ரல் 1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ​​2017இல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இப்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த இணைப்பிற்குப் பிறகு 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்அதிகரித்த லாபம் "2019 ஏப்ரல் மாதம், பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதில் பலன் கிடைத்ததா என்பதை அரசு கவனித்து வந்தது. சராசரி ரீட்டெய்ல் கடன் அனுமதிக்கும் காலம் 23 நாட்களில் இருந்து 11 நாட்களாக குறைந்துவிட்டது, பாங்க் ஆப் பரோடாவில் செயல்பாட்டு லாபம் 11.4% அதிகரித்துள்ளது," என்று நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

வங்கிகள் இணைப்பு இதையடுத்துதான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. எனவே 10 வங்கிகளாக இருந்த இவை, இனிமேல், நான்கு வங்கிகளாக மட்டுமே செயல்படும். இதனால், பணியாளர்களுக்கோ, அல்லது, வாடிக்கையாளர்களோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று, அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: