செவ்வாய், 3 மார்ச், 2020

மநுதர்மசாஸ்திரம், மொழிபெயர்ப்பு: இராமாநுஜாசாரியார்,பதிப்பு 1865 ஆம் வருடம்

1865 ல் வெளியிடப்பட்ட மநுநீதிசாஸ்திர நூலின்படி சூத்ரன் எனும் தொழிலாளி: 1.யுத்தத்தில் ஜயித்து கொண்டுவரப்பட்டவன் 2.பக்தியினால் வேலை செய்கிறவன் 3.தன்னுடைய தேவடியாள் மகன் 4.விலைக்கு வாங்கப்பட்டவன் 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 6.குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன் 7.குற்றத்திற்காக வேலை செய்கிறவன் இதன்படி சூத்ரர்கள் தேவடியாள் மகன் என்றாகிறது!
Dhinakaran Chelliah : இனி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?!
மனிதர்களின் பய உணர்வில் கட்டப்பட்டதுதான் அனைத்து மதமும் எனும் எனது முந்தைய பதிவினை சிங்கப்பூர் நண்பர் தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில்
“Fortunately, Hinduism is beyond religion.. Love is core foundation of Hinduism. Vasudaiva kutumbakam... everyone is His child. We don't fear God.
Religions core is fear...”
என கருத்து தெரிவித்திருந்தார் மலேசியாவைச் சேர்ந்த ஒரு நண்பர். இவர் தீவீரமாக சனாதன தர்மத்தைப் பற்றி எழுதியும் மக்களிடம் பரப்பியும் வருபவர்.

“எனது பழைய பதிகளைப் படித்தால்,
சனாதன தர்மத்தின் வாசுதேவ குடும்பகத்தில்
எந்த அளவு உண்மை என்பது விளங்கும்! இந்து வைதீக சனாதன நூல்களிலிருந்து நூற்றுக்கணக்கில் ஆதாரங்களை விளக்கி வருகிறேன். சனாதன தர்மம் என்பதே வர்ணாசிம கோட்பாட்டில்தான் கட்டமைக்கப் பட்டுள்ளது. வர்ணாசிரமம் என்றாலே நீயும் நானும் சமம் அல்ல, தனித்தனி, என்றும் சமம் ஆகப் போவதில்லை என்று பொருள்! தயவு செய்து எனது பதிவுகளை வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்! “
என பதிலளித்து எனது கருத்தை பதிவு செய்ய ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேல் எங்களது விவாதம் பகவத்கீதை, சாஸ்திர நூல்கள்,மநுதர்மத்தில் சூத்ரர்களைப் பற்றிய செய்தி என பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சியாக 1907 ல் வெளிவந்த மநுதர்மசாஸ்திர நூலின் scan பண்ணிய பக்கங்களை அவருக்கு பகிர்ந்திருந்தேன்.
அதைப் படித்துவிட்டு, என பெரியாரைப் பற்றி விமர்ச்சித்திருந்தார்.

அதாவது 1907 ல் வெளிவந்த மநுதர்மசாஸ்திர நூல் கூட பெரியாரிய சதி என்றும நீதிக் கட்சிக்கும் தொடர்புள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நூலின் 1919 வருட பதிப்பினைத்தான் திராவிட இயக்கம் தங்களது இயக்கம் சார்பாக பின்னாளில் வெளியிடத் துவங்கியது.
நல் வாய்ப்பாக அதே மொழிபெயர்ப்பாளரின் மநுதர்மசாஸ்திர நூலின் 1865 ஆம் ஆண்டுப் பதிப்பு கிடைத்துள்ளது.இந்த நூலின் பக்கங்களை அவருக்கும் comments பகுதியில் இணைத்துள்ளேன்.இது வரை பதில் இல்லை.1865 வருட காலகட்டம் என்பது நீதிக் கட்சியோ, திராவிட இயக்கமோ தொடங்கப்படாத காலம். இனி என்ன சொல்லி மறுப்பார் எனக் காத்திருக்கிறேன்.

1865 ல் வெளியிடப்பட்ட மநுநீதிசாஸ்திர நூலின்படி சூத்ரன் எனும் தொழிலாளி:
1.யுத்தத்தில் ஜயித்து கொண்டுவரப்பட்டவன்
2.பக்தியினால் வேலை செய்கிறவன்
3.தன்னுடைய தேவடியாள் மகன்
4.விலைக்கு வாங்கப்பட்டவன்
5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
6.குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்
7.குற்றத்திற்காக வேலை செய்கிறவன்
இதன்படி சூத்ரர்கள் தேவடியாள் மகன் என்றாகிறது! இதை மறுப்பவர்களுக்கு நியாயமா இந்து சனாதன மதம் மீது கோபம் வர வேண்டுமா இல்லையா?! இதையும் மீறி நாங்கள் இந்து சனாதனவாதிகள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?!
சிந்தியுங்கள் எனதருமை மக்களே!
குறிப்பு: மலேசிய நண்பர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர் இல்லை, இதை அவரே குறிப்பிட்டிருந்தார்
இணைப்பு: மநுதர்மசாஸ்திரம், மொழிபெயர்ப்பு: இராமாநுஜாசாரியார்,பதிப்பு 1865 ஆம் வருடம்

1 கருத்து:

இராசசேகரன் சீ சொன்னது…

இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்க இணைப்பைப் பதிவிடுங்கள்.. நன்றி.