NR இளங்கோ |
அந்தியூர் செல்வ்றாஜ் |
திருச்சி சிவா |
போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்கலாம் முடிகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது. இவர்களின் உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர் இதையடுத்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். இவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் அந்தியூர் செல்வராஜ்
முன்னாள் அமைச்சர் ஆவார். பல வருடங்களாக இவர் திமுகவின் மூத்த உறுப்பினராக இருக்கிறார். இவர் 1996ல் அந்தியூர் தனி தொகுதியில் எம்எல்ஏவாக வென்று அமைச்சர் ஆனார். இப்போது அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ திமுகவிற்கு சட்ட ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே வைகோ ராஜ்யசபா எம்பியாக மனுதாக்கல் செய்த போது, திமுக சார்பாக இரண்டாவது உறுப்பினராக மனுதாக்கல் செய்து இருந்தார். வைகோ மீதான தேசதுரோக வழக்கு அப்போது நடந்து வந்ததால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி சிவாவிற்கு மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இவருக்கு பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது திமுக தலைமை இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.
திருச்சி ஏற்கனவே 1996, 2002, 2007 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் திமுக சார்பாக மாநிலங்களை எம்பியாக இருந்த.. நன்றி சொன்னார்
மாநிலங்களவையில் திமுகவின் அடையாளமாக இருந்தார். திமுக சார்பாக பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு இவரின் பேச்சை பலரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக