வெள்ளி, 6 மார்ச், 2020

பெரியார் இயக்கங்களும் புலி அமைப்பும் .. முகநூல் கருத்து பரிமாற்றங்கள்

Kalai Selvi : · 30 ஆண்டுகளாக ஈழப் போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக நின்ற பெரியார் இயக்கங்கள் தந்தை பெரியாரை பலி கொடுத்து விட்டன,

Dev JB அதிலும் பெரியார் படத்தை வைக்கும் இடத்தில அதற்கு சமமாக பிரபாகரன் படம் வைப்பதெல்லாம் கேவலம்... உனக்கு பிரபாகரன் தலைவன்னா அவர் படம் மட்டும் வை.. என்னமோ செய்.. ஆனா ...

இராவண கோபால் : முற்றிலும் புலிகளையோ மற்ற ஈழ இயக்கங்களையோ புறந்தள்ளவும்.முடியாது . நாமுடைய அளவு என்பது தமிழர்களுக்கான ஆதரவு மட்டுமே என்பதாக இருக்க வேண்டும் .இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒருவரை மட்டும் கதா நாயகனாக பார்க்கும் மனப்பான்மைதான் இன்னும் பலபேருக்கும்.( நானும் அப்படி இருந்தவன் தான்) வீர தீர சாகசங்களை அவ்வப்போது பேசுவது . உணர்ச்சி வயப்பட்டு துடிப்பதுபோல நடிப்பது .இதன் மூலம் தன்னை வீரனாக காட்டிக்கொள்வது

வளன்பிச்சைவளன் :  உண்மை கோடம்பாக்கம் சம்பவத்திற்கு பிறகு அமிர்தலிங்கம் பிரபாகரன், உமாமகேஷ்வரிடம் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பது இல்லை என்ற உறுதி மொழியை பெற்றார். அப்போது எல்லா இயக்கங்களும் பரஸ்பரம் உறவு இருந்தது பண முடை ஏற்படும் காலங்களில் மற்ற இயக்கத்தினரிடம் இருந்து பணம் பெறும் அளவிற்கு உறவும் இருந்தது. பெரியாரிய இயக்கங்கள் புலிகளை தமிழகம் பிரமிப்பாக பார்க்கும் மனநிலையை உருவாக்கினார்களே அன்றி அவர்களை தங்கள் சித்தாந்த வயப்படுத்த எந்த ஒரு சிறுமுயற்சியும் எடுக்க வில்லை அந்த சிந்தனையே அற்றவர்களாக இருந்தனர். அவர்களை தொழுது வணங்கும் நிலையில் இருந்தனர் என்பது கசப்பான உண்மையே. இதில் கலைஞர் மிகச் சரியான நிலைப்பாட்டில் இருந்தார், சர்வாதிகார மனநிலை கொண்டவரை ஆதரிக்க ஆதரிப்பது தவறு என்பதால் விலகிக் கொண்டார் ஆனால் பெரியவாதிகள் உயர்த்தி பிடித்தது வேதனை, அந்த தவறை மறுபரிசீலனை செய்ய மறுப்பது இன்றும் மாவீரர் நாட்களில் துதி பாடுவது பெரியாருக்கு இழைக்கும் துரோகமே.

Devi Somasundaram : டெஸோ வ கலைஞர் ஆரம்பித்த போது அவரோடு இருந்து இருக்கலாம்னு சொன்னேன் தோழர் ..தமிழக பெரியாரிய இயக்கங்களின் ஆதரவு பிரபாகரனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் கொஞ்சம் இறங்கி வர யோசிக்க வாய்ப்பை தந்து இருக்கலாம் ...சித்தாந்த ஆதரவை தாண்டி ஆயுத உதவி, பொருள் உதவின்னு கிட்ட தட்ட கடத்தல்காரர்களா மாறினதுலாம் தடுக்கப் பட்டு இருந்தால் பிரபாகரனுக்கு இத்தனை துணிச்சல் வந்திருக்காது .... கோடம் பாக்கம் துப்பாக்கி சூட்டுக்கு பின்னும் எப்படி பிரபாகரனை ஆதரித்தார்கள்னு புரியல .


வளன்பிச்சைவளன் :  1984 ல் பிரபாகரன் தெளிவு படுத்தியது யூக்கோஸ்லோவியா பாணியிலான ஆட்சி முறை அதாவது ஒரு கட்சி ஆட்சி. அப்போது கலைஞர் ஈழ மக்கள் விரும்புவது அவர்களுக்கு வேண்டியது ஜனநாயகம் மட்டுமே சர்வாதிகாரமல்ல என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டார் இதுவே கலைஞருக்கும் பிரபாகரனுக்குமான இடைவெளி, எந்த ஒரு ஜனநாயக உணர்வு உள்ளவர்களும் பிரபாகரன் கருத்தை ஏற்க இயலாது. பிரபாகரன் தன் சித்தாந்தப் படி மாற்று இயக்கங்களை அழித்தொழித்து ஒற்றை இயக்கம் என ஒரே கட்சி ஆட்சி முறைக்கு வழிகோலினார். கலைஞர் தமிழீழ விடுதலை க்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒரு ஜனநாயகவாதியாக பாசிச எதிர்ப்பாளராக டெசோ அமைப்பை கலைத்தார் இனி பேசப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின் ஈழ மக்கள் சிங்கள இராணுவத்தால் பாதிக்கப் பட்ட போது கண்டனம் தெரிவித்தார். ஈழச் சிக்கல் சர்வதேச அளவில் பேசப்பட்டு சர்வதேச நாடுகள் பேச்சு வார்த்தையில் பங்கு பெற்று பல நாடுகளில் புலிகள் தடை செய்யப் பட்டு சர்வதேச உதவியுடன் புலிகளின் ஆயுதச் சேகரிப்பை இரண்டாடுகள் தொடர்ந்து அழித்து. சுய நிர்ணய உரிமையை ஏற்கிறோம் என உலகச் சூழலை கருத்தில் கொண்டு கையெழுத்திட்ட பாலசிங்கத்தை விலக்கி இதை அடுத்து புலிகளில் ஏற்பட்ட பெறும் பிளவு என சகல வழிகளிலும் புலிகளை முடக்கி பின் அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இந்தியா தலையிட்டாலும் தடுத்து இருக்க முடியாத சர்வதேச சிக்கலானதில் நெடுமாறன் பேச்சை கேட்டு பஜக வந்தால் போர் நிறுத்தம் நடைபெறும் என நம்பிய பிரபாகரனை கலைஞர் நினைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையது. காலமெல்லாம் புலிகளை சர்வதேச அரங்கில் இடம் பெற செய்ய உழைத்த பாலசிங்கம் அவர் எடுத்த சரியான முடிவை நிராகரித்து பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கி சிறுமை படுத்திய பிரபாகரன் சர்வதேச நகர்வை கருத்தில் கொள்ளாமல், ராஜீவ் கொலை குற்றவாளிகள் என தண்டனை பெற்ற ஏழு பேரை விடுவிக்காத பஜகவை, ஈழ அகதிகளை மீண்டும் நாடுகடத்துவோம் என கூறும் பஜக வை நம்பினார். ஆரிய விசத்தை அறிய தவறினார் சரியான அரசியல் தெளிவற்று முடிவெடுத்து ஐம்பது ஆண்டுகால ஈழ போராட்ட த்தை தன் அறியாமையால் முடிவுக்கு கொண்டு வந்தார் இதில் கலைஞர் என்ன பங்கு வகித்திருக்க இயலும்..

Kalai Selvi  : கலைஞரைத் தானே துரோகிகள் பட்டியலில் முதலில் வைத்துள்ளனர் ஈழக் கண்ணாடி போட்ட பெரியாரிஸ்ட்கள் & Pi த பிணவியாபாரிசங்கிகள் நீங்களும் அப்படியே எப்படி? கலைஞரை என்றாவது மதித்தானா? இல்ல அவரின் பேச்சைத் தான் கேட்டான பிரபா கான்? நெட்டை மரங்களும் நடரா சன்களும் தானே அவரின் ஆஸ்தான ஆலோசகர்கள்..

Devi Somasundaram :  உண்மை , இனப் பாசம் என்பது குற்றத்துக்கு துணை போவது இல்லை .. கொஞ்சம் நிதானித்து கலைஞர் கூட நின்று அரசியல் தீர்வுக்கு முயன்று  இருந்தால் இவ்வளவு நான் இலங்கையில் ஒரு நல்ல தீர்வு வந்து இருக்கும்..

Tha Mu : வெட்ட வெளிச்சமான பதிவு, நிர்வாண உண்மை...

 Radha Manohar  : ஆம் முற்று முழுதான உண்மை.. சகோதர படுகொலைகளை கண்டும் காணதது போல இருந்தார்கள் . அதையும் தாண்டி முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்பையும் கூட அப்படியே கடந்து போனார்கள் .. இன்றுவரை பெரியார் இயக்கங்கள் தங்களின் அந்த தவறை பற்றி வாய் திறந்ததே இல்லையே? இவரகள் ஆர் எஸ் எஸ் சங்கிகளை பற்றி செய்யும் அத்தனை விமர்சனங்களும் புலிகளுக்கு அப்படியே பொருந்துகிறதே ? ஆர் எஸ் எஸ் ஐ விட பலமடங்கு பாசிச நரவெறி ஆட்டத்தை நடத்தியவர்கள் அல்லவா புலிகள்? புலிகளை போற்றி கொண்டே சங்கிகளை பற்றி வகுப்பெடுக்கும் பெரியார் வாதிகளே உங்கள் கைகளில் அந்த இரத்தகறை படித்திருக்கிறது .. மறுக்க முடியுமா? இன்னும் நீங்கள் அந்த பாசிச மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை .. மயக்கம் தெளிந்திருந்தால் அதை நிருபியுங்கள் . சுய விமரசனத்தை பொதுமேடையில் செய்யுங்கள் .. நீங்கள் பாதை மாறி போய்விட்டீர்கள் . புலிகள் ஒரு பாசிஸ் வெறியாட்டத்தை நடத்தியவர்கள் என்பதை உரத்து கூறுங்கள் . அப்பொழுதான் புலம் பெயர் நாடுகளிலும் கூட வளர்ந்து வரும் ஆர் எஸ் எஸ் கிளை அமைப்புக்களை ஓரங்கட்ட முடியும் .. இல்லையேல் அவர்கள் நவீன சங்கிகளாக அசல் பார்பனை விட மோசமானவர்களாக உருமாறுவார்கள் .. திராவிடத்தின் ஆரிய எதிரிகளை விட இந்த ஏவல் பேய்கள் அதிக கெடுதல் செய்யும் ... சிந்தியுங்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது

கருத்துகள் இல்லை: