புதன், 4 மார்ச், 2020

இஸ்லாமியர்களும் திமுகவும் ... விரிவான ஆய்வு கட்டுரை .ஆலஞ்சியார்

ஆலஞ்சியார் : திமுகவிற்கு இஸ்லாமியர்களின் வாக்கு முழுவதுமாக விழுவதில்லை.. திமுகமீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. சமீபத்தில் அதிகமாக இப்படிபட்ட செய்திகள் உலா வருகிறது ..
ஒரளவு உண்மையும் கூட .. இஸ்லாமியர்களை கைவிட்டுவிட்டதா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பபட்டும் வருகிறது.. திமுக துரோகம் செய்துவிட்டது என்று கூட பேசுகிறார்கள் ஆனாலும் சிலர் இன்னும் திமுகவை ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களென்ற கேள்வியையும் வைக்க மறப்பதில்லை .. இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக செய்ததைப்போல வேறெந்த கட்சியும் செய்ததில்லை என பெரும் பட்டியலை தரமுடியும் .. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களை சேர்த்தது கூட திமுக அரசுதான் .. இன்று கல்வி வேலைவாய்ப்பில் சுலபமாக வர வழிவகை செய்து 3.5% விழுக்காடு இடஒதுக்கீட்டை தந்ததுவரை நிறைய சொல்லலாம் .. பார்பன சக்திகள் திடீரென பிள்ளையாரை கொண்டுவந்து வைத்த போது.. மதகலவரத்தை தூண்ட அறிவாளிகள் படிக்கும் துக்ளக்கில்
சோ எழுதியதும்
கொஞ்சமும் சளைக்காமல் திருவல்லிகேணியிலேயே கூட்டம் போட்டு கலைஞரே திடீர்பிள்ளையார் என்று அறிவித்தெல்லாம் இன்று மதவெறியில் சிக்கி தவிப்பவர்களுக்கு புரிந்திருந்திருக்கும்.. 


எவ்வளவு பெரிய பிரச்சனையை ஒரே வார்த்தையில் முடித்தாரென்று ..நபிகள் பிறந்த நாளை விடுமுறையாக இந்தியாவிலேயே முதன் முதலில் அறிவித்தது திமுக தான் .. இன்னும் நிறைய..

..
கரசேவைக்கு ஆள் அனுப்பிய மதமாற்றதடைச் சட்டத்தை கொண்டுவந்தபோது பார்பனர்கள் தங்கள் குரு காஞ்சி ஜெயேந்திரர் தலைமையில் பாராட்டு கூட்டம் நடத்தினார்கள் அன்று ஆட்டக்காரி பத்மாசுப்ரமணியம் எதிர்ப்பாளர்கள் அரங்கைவிட்டு வெளியேறிவிடுங்களென முன்னெச்சரிக்கை செய்து விழா நடத்தினார்கள்.. ஆனாலும் ஜெயலலிதாவை கூட இந்தளவு இஸ்லாமியர்கள் விமர்சனம் செய்ததில்லை ..
CAA வை ஆதரித்து ஓட்டு போட்ட எடப்பாடியை நீங்கள் NPR எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள் உங்களை வெற்றிபெற செய்கிறோமென அளவிற்கு பாசபிணைப்போடு இருப்பவர்கள் ஆனால் திமுகவை மட்டும் குறை கூறுவார்கள் ..
கோவை குண்டுவெடிப்பை தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் மீதான வழக்கை காரணம் காட்டி திமுகவை வெறுக்க தொடங்கினார்கள் ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவால் வழக்கை திரும்ப பெற முடிந்ததா என்றால் பதில் இல்லை
..
இஸ்லாமிய சமூகம் ஜமாத் ரீதியாக பிளவுபட்ட போது தான் சமுதாயத்திற்குள் பகை வன்முறை
கடுஞ்சொற்களால் பிற மதத்தின் மீதான வன்மம் எல்லாம் வந்தது .. வெட்டிடுவோம் தூக்கிருவோம் என்றெல்லாம் இளைஞர்கள் மத்தியில் மூளையை மழுங்க செய்யும் சலவை மேற்கொள்ளபட்டு வழக்கு சிறையென்று சமூகத்தின் மீதான பார்வை வேறுவிதமாக போனது சமூகத்தின் வெகுமக்கள் விரும்பாத செயல் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான கறையானதும் அது தொடர்ந்து இன்று வரை வேட்டையாடுவதும் கண்டுகூடாக காணலாம் ..
..
வாக்குவங்கி சிதறியதும் பல அமைப்புகளாய் பிரிந்து யாருக்கும் பயனளிக்காத நிலைக்கு தள்ளபட்டதும் வேண்டாவெறுப்பான நிலையில் இஸ்லாமிய கட்சிகள் .. இந்நிலையில் கூட கொஞ்சமேனும் மெச்சபடும் வகையில் நடத்துவது திமுகதான் அதை கூட இன்றைக்கு புரிதலில்லாத இளைஞர் கூட்டம் இல்லாமல் ஆக்கிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது
வெளிப்படையாகவே சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை ..
இன்றைய சூழலில் திமுகவை தவிர்த்தால் இழப்பு திமுகவிற்கில்லை என்பதுதான் நிதர்சனம்
..
சொல்வதற்கொன்றுமில்லை..
..
ஆலஞ்சியார்

விழுவதில்லை.. திமுகமீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. சமீபத்தில் அதிகமாக இப்படிபட்ட செய்திகள் உலா வருக

கருத்துகள் இல்லை: