வெள்ளி, 6 மார்ச், 2020

Yes Bank 96% நஷ்டம் கொடுத்த யெஸ் பேங்க்! பணம் போட்டவர்கள் ????


tamil.goodreturns.in  :யெஸ் பேங்க். தற்போது அதிகம் மக்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். நேற்று முதல் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது. அதன் பின் யெஸ் பேங்க் என்ன ஆனது. இந்த வங்கியில் என்ன பிரச்சனை, ஏன் இந்த கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள் என பல செய்திகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன.
இந்த நேரத்தில் யெஸ் பேங்கின் பங்கு விலை குறித்தும் செய்திகள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன. யெஸ் பேங்க் பங்கின் விலை போக்கைத் தான் கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். கடந்த 12 ஜூலை 2005 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது யெஸ் பேங்க் பங்குகள். முதல் நாளே யெஸ் பேங்க் 13 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. பட்டியலிடப்பட்டதில் இருந்து சென்செக்ஸின் குறைந்தபட்சப் புள்ளி என்றால் அது 11.25 தான். 15-07-2005 அன்று யெஸ் பேங்க் 11.25 என்கிற குறைந்தபட்ச விலையைத் தொட்டது.
 எதுவரை விலை ஏற்றம் எதுவரை விலை ஏற்றம் கடந்த 10-01-2006 அன்று யெஸ் பேங்க் பங்கு விலை 55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இதை முதல் நல்ல விலை ஏற்றம் என்று சொல்லலாம். ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் யெஸ் பேங்க் பங்கு சரியத் தொடங்கிவிட்டது. எதுவரை சரிந்தது என்று கேட்டால் 09-03-2009-ம் தேதி 8.16 ரூபாய் வரை சரிந்தது. இதில் 2008 பொருளாதார நெருக்கடியும் வந்து போனது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் மீண்டும் விலை ஏறத் தொடங்கியது. 01-11-2010 அன்று இரண்டாவது விலை உச்சமாக 77.60 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் மீண்டும் யெஸ் பேங்குக்கு போதாத காலம் வந்தது. 02-01-2012 அன்று சென்செக்ஸ் 46.11 ரூபாயைத் தொட்டது. இது தான் யெஸ் பேங்கின் இரண்டாவது விலை ஏற்றம் மற்றும் இறக்கம்.

d 3-வது ஏற்றம் 17-05-2013 அன்று 109 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது யெஸ் பேங்க். 28-08-2013 அன்று 43.22 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சிறிய ஏற்ற இறக்கத்துக்குப் பின், தான் யெஸ் பேங்க், தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியது. 2013-க்குப் பிறகு பெரிய இறக்கங்கள் இல்லை என்றே சொல்லலாம். மெல்ல விலை ஏற்றம் காணத் தொடங்கியது. 20-08-2018 அன்று யெஸ் பேங்க், தன் வாழ் நாள் உச்சமான 404 ரூபாயைத் தொட்டது Read பெரும் சரிவு அதன் பிறகு தான் சனிச் சரிவு ஆரம்பித்தது.

மேலே சொன்ன 20-08-2018-க்குப் பின், அத்தனை நல்ல ஏற்றத்தை யெஸ் பேங்க் தன் வாழ் நாளில் பார்க்கவில்லை. இன்று 06-03-2020 குறைந்தபட்சமாக 5.5 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆனால் இன்றைய குளோசிங் நேரத்தில் எப்படியோ அடித்துப் பிடித்து யெஸ் பேங்க் பங்கு விலை 16.20 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

96 சதவிகிதம் ஆக கடந்த 20-08-2018 அன்று 404 ரூபாய்க்கு யாராவது யெஸ் பேங்க் பங்கை வாங்கி, இன்று வரை அதை விற்காமல் வைத்து இருந்தால், சுமாராக 96 சதவிகிதம் நஷ்டம் அடைந்து இருப்பார்கள். இதையே இன்றைய குறைந்தபட்ச விலையான 5.5 ரூபாயை வைத்து நஷ்டத்தை கணக்கிட்டால், நஷ்டம் சுமாராக 98.6 சதவிகிதத்தைத் தொடும்.

கருத்துகள் இல்லை: