
இரு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது அந்த தீர்ப்பு.
அந்த கிரிப்டோ கரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகள் மற்றும் அதனுடைய வளர்ச்சி.
வளர்ச்சியைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
முதலில் கிரிப்டோ கரன்சி பற்றிய உண்மைகள் அறிவோம்.
கிரிப்டோ கரன்சி பற்றிய அறிய நாம் ஒரு எடுத்துக்காட்டோடு விளக்கினால் எளிதில் புரியும்.
கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative) புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட் காயின் Bit Coin. இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர். பெயர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது ஒப்புகையோடு பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது நபரை விட நம்பகமான பாதுகாப்பைக் கொண்டு, பண பரிவர்த்தனைகளை செய்திட முடியும் என்பதே பிட் காயின் என்ற வழிமுறையின் இமாலய வளர்ச்சி.
Bit Coin என்பது ஏதோ ஒரு வட்ட வடிவ, சதுர வடிவ நாணயமோ அல்ல. அது ஒரு மென்பொருளால் உருவான ஒரு குறியீட்டு எண். Address. Virtual Money, மெய்நிகர் காசு.
என்னது!! மென் பொருளால் உருவான குறியீடா மெய்நிகர் காசா ?
என்று ஆச்சிரியப்படுபவர்களுக்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
உலகில் உள்ள பணத்தை மொத்தமாக 21 மில்லியன் பிட் காயினாக உள்ளடக்கிட முடியும் என்பதே இந்த அறிஞரின் கூற்று. அதாவது 2.1 கோடி bit coin அடட்ரெஸ்ஸை வைத்துக்கொண்டு உலகில் வணிகம் செய்ய முடியும் என்று வடிவமைக்கப்பட்டது இந்த பிட் காயின்.
2009 முதல் ஒவ்வொரு ஆண்டிருக்கும் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டு, புரியும்படியாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 50 பிட் காயின் வெளியிடும் இந்த மென் பொருள்.
அதுவும் ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து கொண்டே இறுதியாக 2.1 மில்லியன் என்ற அதன் இலக்கு வந்து விட்டால் அதன் உற்பத்தி நிறுத்தப்படும் இது தான் சதோஷியின் இலக்கு. இதுவரை ஏறத்தாழ 18 மில்லியன் உற்பத்தி ஆகி விட்டது. தற்போது இன்னும் சில மில்லியன்களே மீதம்.
இதை நிர்வகிக்கப்போகிறவர்கள் யார் ?இதை பாதுகாப்பார்கள் யார் ?
யாரும் இல்லை.
குழப்பமா இருக்கா ?
ஓபன் சோர்ஸ் (open source ) மூலம் இதை தயாரித்து 2.1 கோடி நாணயங்கள் வந்தவுடன் இது தனது உற்பத்தியை நிறுத்திக்கொண்டால், வெறும் 2.1 கோடி காயின்களாக இருக்கும் பிட் காயின்
மதிப்பு கூடும் என்பதே இதன் கருத்தியல்(Concept). புரியவில்லையே ?
எளிதாக புரியும்படி பார்க்கலாம்.
நிலத்தில் கிடைப்பது தான் இரும்பும், தங்கமும். ஏன் ஒரு கிலோ இரும்பும் ஒரு கிராம் தங்கமும் ஒரே விலையிலா கிடைக்கிறது ? இரும்பு பெருவாரியாக கிடைக்கிறது, தங்கம் மிக குறைந்தே கிடைக்கிறது. இன்னும் கேட்டால் சுத்தமான இரும்பை வைத்து கொண்டு ஒரு பெரிய கப்பலை உருவாக்கலாம். ஆனால் தங்கத்தை வைத்துக் கொண்டு ஆபரணங்கள், நகை போன்றவை செய்ய வேண்டுமானால் கூட அதில் செம்பை கலக்க வேண்டும். இது தான் யதார்த்தம். இருந்தாலும் தங்கத்திற்கு மோகம் அதிகம் அது குறைந்த அளவில் பூமியில் காணப்படுவதாலும், இரும்பை காட்டிலும் அதை தோண்டி எடுக்க ஆகும் செலவு பல நூறு மடங்குகள். இது தான் அந்த உலோகத்தின் தன்மையை உயர்த்தி விலையை நிர்ணயிக்கிறது.
ஆகவே, பிட் காயின் குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி ஆகும். அதனை அதற்கு மேல் உற்பத்தி செய்ய முடியாத அளவில் மென்பொருளை எழுதி உள்ளார் இதன் நிறுவனர் சதோஷி நாகமோட்டோ.
இதனால் இதற்கு demand இருந்துக் கொண்டே இருக்கும். ஆகவே இதனை வாங்கி வைத்திருப்போர் மிகவும் புத்திசாலியாக பார்க்கிறது இந்த கிரிப்டோ கரன்சி உலகம்.
அதெல்லாம் சரி, இதன் வளர்ச்சி என்ன ? ஏன் இதை தடை செய்தார்கள்? இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே வரும். அதற்கு விடைகள் அடுத்து பதிவில் கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக