சனி, 7 மார்ச், 2020

Yes bank ஒன்பது லட்சம் கோடிகளை பெரும் பண முதலைகளுக்கு ....

Shivakkumar TD
பாஜக ஆட்சியில் யெஸ் வங்கி கொடுத்த கடன் தொகை மதிப்பு.
நிதியாண்டு2014- 55,000 கோடிகள்.
நிதியாண்டு2015- 75,000. கோடிகள்,
நிதியாண்டு 2016- 98,000 கோடிகள்,
நிதியாண்டு 2017- 1,32,000 கோடிகள்,
நிதியாண்டு 2018- 2,03,000 கோடிகள்,
நிதியாண்டு 2019- 2,41,000. கோடிகள்

ஏறக்குறைய ஒன்பது லட்சம் கோடிகள்
இது மற்ற வங்கிகள் அளித்ததை விட இருபது சதவிகிதம் அதிகம்.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
''யெஸ் வங்கி பின்னடைவால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனெனில் அந்த வங்கியில் எனக்கு கணக்கு எதுவும் இல்லை''
என்று கூறியுள்ளார்.
எவன் செத்தால் எனக்கென்ன என்பதைப் போல உள்ளது.

 Narayanaperumal Jayaraman உண்மையான ஸ்கெட்ச் எஸ்.பி.ஐ, எல்.ஐ.சிக்குத்தான்.ஏற்கனவே ஐ.டி.பி.ஐ வங்கி திவால் ஆகும் நிலையில் எல்.ஐ.சியில் பிடுங்கி மூச்சு விட வைத்தார்கள். ஐ.எல்.எப்.எஸ் போன்ற இழுத்துக்கொண்டு கிடக்கும் பல நிறுவனங்களுக்கு எல்.ஐ.சியின் பணத்தை வாரி இறைத்திருக்கிறது அரசு.


இப்போது யெஸ் பேங்க் டெபாசிட்டர்களை காப்பாற்ற எஸ்.பி.ஐயும் இறக்கிவிடப்பட்டிருக்கிறது. குளோபல் ட்ரஸ்ட் வங்கி இப்படி மூழ்கிய போது அதனை ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் உடன் இணைத்து பணம் போட்டவர்களை காப்பாற்றியது அரசு. அப்போதே, இனி தனியார் வங்கிகள் மூழ்கினால் அரசு காப்பாற்றாது என சொன்னதாக நினைவு.

இன்னும் வரிசையாக வங்கிகள் காலியாக போகின்றன. இப்போது உள்ள வாராக்கடன் என்பது வங்கிகள் அட்ஜட்ஸ் செய்து வந்த தொகை. தற்காலிக ஓவர்டியு கொடுத்து பல கடன்கள் காப்பாற்றப்படுகின்றன. நோண்டினால் இன்னும் பெரிய பித்தலாட்டங்கள் வெளியே வரும்.

இப்போது கொரோனா பிரச்சினை தொழில் நிறுவனங்களையும் கடுமையாக சிதைக்கிறது. வராக்கடன் பிரச்சினை சரியாவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி இருந்தாலும் மோடி போன்ற கேஸ்கள் ஆட்சியில் இருந்தால் அது விளங்காது.

இப்படி மூழ்கும் எல்லா சின்ன நிறுவனங்களையும் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ தலையை தடவி தற்காலிகமாக காப்பாற்றி கடைசியில் இந்த பெரிய நிறுவனங்களுடன் சேர்த்து மங்களம் பாடப்போகிறார் நம்ம 'ஜி'.

Villavan Ramadoss


Guru Murugesan : · வங்கிகள் திவாலானால் அதிகபட்சமாக 5 லட்சம் இழப்பீடு வழங்குவோம்ன்னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.அதற்கடுத்த மாதமே திருப்பதி தேவஸ்தானம் 1400 கோடியை யெஸ் பேங்கிலிருந்து எடுத்துள்ளது. அதானி நிறுவனம் கடந்த மாதமே பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளது. அவ்வங்கியில் தங்கள் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்கள் தான் இளிச்சவாயர்கள்

கருத்துகள் இல்லை: