சனி, 7 மார்ச், 2020

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா சிறை செல்ல காரணமாக இருந்த பேராசிரியர் அன்பழகனின் வழக்கு

Vishnupriya R - /tamil.oneindia.com : சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறை செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் ஆவார். 
கலைஞர் கருணாநிதியால் மிகவும் போற்றப்பட்டவரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவருமான க அன்பழகன் கடந்த 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 1 மணியளவில் காலமானார். 
அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறை செல்ல காரணமாக இருந்தது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கு குறித்த ஒரு பார்வை. 
 ஜெ. மறைவுலஞ்ச ஒழிப்பு லஞ்ச ஒழிப்பு 1991-96-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி 1996-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். ஜூன் 31ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகை விசாரணைக்குப் பின்னர் ஜெயலலிதா அதே ஆண்டு கைது செய்யப்பட்டார். 
பின்னர் அவர் பிணையில் வெளியானார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1997-ஆம் ஆண்டு ஜூன்4, ஊழல் தடுப்புச் சட்டத்தில் செயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
கர்நாடக அரசு இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் 2003-ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியும் தன்னை இணைத்து கொண்டார். நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர்

 10 கோடி அபராதம் இந்த வழக்கு 18 ஆண்டு காலமாக தொடர்ந்து வந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27, விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். அவர் மட்டுமல்லாமல் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் குற்றவாளி என அறிவித்தார். ஜெயலலிதாவிற்கு ₹100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ₹10 கோடியும் அபராதமாகவும், அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையடுத்து சிறை சென்ற ஜெயலலிதா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் 4 பேரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே ஜெயலலிதா மறைந்தார். இதையடுத்து கடந்சத 2017-ஆம் ஆண்டு குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை சென்றனர்.

கருத்துகள் இல்லை: