வெள்ளி, 6 மார்ச், 2020

Yes Bank பணம் மீளப்பெற கட்டுப்பாடு .. யெஸ் வங்கியில் ₹1300 கோடி வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம் இரு மாதங்களுக்கு முன்பே மீட்டது...


tamil.news18.com :இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக நேற்று அறிவித்தது.
இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருப்பதி தேவஸ்தானம் தனது யெஸ் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக 1300 கோடி ரூபாயை எடுத்துள்ளது.யெஸ் வங்கியின் திறன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் அதனது போக்கு சரியில்லை என்பதை அறிந்த திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மொத்தப் பணத்தையும் எடுத்துவிட தீர்மானித்துள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தகவல் அளித்தப் பின்னர் தேவஸ்தானம் மொத்தப் பணத்தையும் கணக்கிலிருந்து எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: