மின்னம்பலம் :குஜராத்தில்
தமிழக மாணவர் தற்கொலையில் ஈடுபட்டது தொடர்பாகப் பேராசிரியர்கள் உட்பட 13
பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
குஜராத், அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் திருநெல்வேலி, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற இளைஞர். 3ஆம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்துவருகிறார்.
மாரிராஜ் தலித் என்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கல்லூரிப் பேராசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாரி ராஜ் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 5) மாரி ராஜ் விடுதி அறையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் அவர் எழாததால் சந்தேகமடைந்த மாணவர்கள் அவரை எழுப்பியதில் தூக்க மாத்திரை அதிக அளவு உட்கொண்டது தெரியவந்தது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் உள்ள சாதியப் பாகுபாடுதான் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இருப்பினும் விரக்தியடைந்த மாரிராஜ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் 8 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் குஜராத் விரைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக