அறிஞர் அண்ணா 1962 தேர்தலில் தன் சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் நடேச முதலியார் என்ற பஸ் முதலாளியிடம் தோற்றார்.
ராஜா ஜி i : கர்மவீரரின் தோல்வியில் காலத்தின் கரங்கள் இருந்தன.
அறிஞர் அண்ணாவின் தோல்வியின் பின்னணியில் யாருடைய கரங்கள் இருந்தன?
Nanda Kumar :அவர்கள் சொல்லும் வரலாற்று பக்கங்கள்.
என் ஆதங்கம் :காமராஜரை தோற்கடித்தீர்களே தோற்கடித்தீர்களே என்று 1967 ம் ஆண்டு தேர்தலில் காமராஜர் தோற்றதற்கு ஆயாசப்படும் மக்களுக்கு என் வினா-

1964முதல் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு ரேஷனில் அரிசி, மண்ணெண்ணையாகிய அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு.
அதனால் வாரம் ஒரு இரவு அரிசி உணவு தவிர்க்கவேண்டும் எனும் கட்டாயம்,
நாட்டின பொருளாதார சீர்திருத்தம் என்று சொல்லி 22 காரட் தங்கம் விற்பனை கூடாது 14 காரட் தங்கம் தான் விற்பனை
அதன் காரணமாக பொற்கொல்லர்களின் தற்கொலை இப்படியாக நாட்டுமக்கள் பசியிலும் பஞ்சத்திலும் தவித்த அவலம்.
அனைத்துக்கும் மேலாக 1965 ம் வருடம் சுனாமி போல் தமிழ்நாட்டில் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். இதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, அந்த காங்கிரஸ் வேட்பாளராக நின்ற காமராஜர் 1967ல் நடந்த பொது தேர்தலில் ஐனநாயக முறையில் தோற்கடிக்கப்பட்டார்.
அவரின் தோல்விக்கு காரணம் அவர் சார்ந்த கட்சியின் மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பு அவரின் தனிப்பட்ட குணநலன்களை மறக்கடிக்ப்பட்டதுதான்.
ஆகவே அவர் தோற்றதற்கு காரணம் அவர் சார்ந்த இயக்கம்.
ஆனால் பேரறிஞர் அண்ணாவின் 1962ம் வருட தோல்வி எப்படிப்பட்டது.
1957 ம்வருடம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து மன்ற மாண்புகளையொட்டி விவாதம் செய்த சிறந்த நாகரீக அரசியல்வாதி,
மாற்றோரையும் மதிக்கும் பாங்கு, தொன்டர்களின் வீட்டிற்கு இரவில் அகால வேளையில் சென்றால் தொன்டர்களுக்கு அசௌகரியம் செய்ய நினைக்காமல் தொண்டன் எழுந்து வரும்வரை திண்ணையில் உறங்கிய எளிமை.
கட்சியில் ஜனநாயகம், தான் இருக்கும்போதே நாவலரை பொதுசெயலாளராக தேர்வு செய்து தம்பி வா தலைமையேற்க வா என்று சொன்ன பணிவு,
இத்தனையும் மறைக்கப்பட்டு அதுவரை கட்சியில் இல்லாத நடேசமுதலியார் எனும் பெரும் செல்வந்தரும் பஸ் முதலாளியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஒரு ஓட்டுக்கு 5 ரூபாய் என்று விநியோகம் செய்து அன்றைக்கு ஏற்படுத்தப்பட்ட ஃபார்முலாவால் அந்த மாமனிதர் ஜனநாயகமற்ற பணநாயக குயுக்தியால் தோற்கடிக்கப்பட்டாரே அது எந்த விதத்தில் நியாயம்.?!
காமராஜருக்கு பொங்கும் மக்கள் அண்ணாவை மறந்தார்களா அல்லது மறைக்கிறார்களா?
பேரறிஞரை பற்றி பேச வேண்டியவர்கள் கூட பேசா மடந்தைகளாய் இருப்பதும் ஏனோ ?!
வரலாறுகள் அவ்வப்போது சொல்லப்படவேண்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக