வெள்ளி, 5 ஜனவரி, 2018

இந்தியாவுக்கு 2 வது இடம் ...ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி.. மிகவும் ஆபத்தான கட்டம் ..

அதிகரித்து வரும் நிதி சமத்துவமின்மை: புதிய இந்தியா யாருக்காகப் பிறக்கும்?
இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி உச்சத்தை தொட்டு நிற்கிறது என்றது கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தின் குளோபல் வெல்த் ஆய்வு. குறிப்பாக உலக அளவில் நிதி சமத்துவமில்லாத நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமை என்கிறது அந்த ஆய்வு.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, தராசின் மற்றொரு தட்டு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய பணக்காரர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் இடம் பெறும் அதே நாட்டில்தான் கடன் சுமை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாட நிகழ்வாக இருக்கிறது என்கிற உண்மை இதை உணர்த்துகிறது.

வறுமை, பொருளாதார சமமின்மை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கங்கள் தொலைநோக்குப் பார்வையில் செயல்படவில்லை. குறுகிய கால நோக்கில் அரசியல் தேவைகளைப் பொறுத்து முடிவு செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளின் லாபத்திற்காக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் ஆக்ஸ்பாம் ஆய்வு கூறுகிறது. ஏழை பணக்காரர் பொருளாதார சமமின்மையை களைவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக கடைசி வரிசையாகும்.
----------
இந்த நாடு சாமானிய மக்கள் வாழ தகுதி இல்லாத நாடாக மாறிக்கொண்டே வருகிறது.😢😢😢
இப்படி ஒரு தனி மெஜாரிட்டில உக்காந்துட்டு மோடி & கோ. ஏழை/ நடுத்தர மக்களுக்கான திட்டம் போட்டு நிறைவேற்ற முடியவில்லை என்றால்... இனிமேல் மோடி எப்போது மக்களுக்காக உழைப்பார்??? தேர்தலுக்கு முன் இருக்கும் இந்த ஒரு வருடத்திலாவது கார்ப்பரேட், RSSக்கு மட்டும் உழைப்பதை குறைத்து விட்டு.. மக்களுக்காக மோடி உழைத்தால் நல்லது 🙏.
http://tamil.thehindu.com/…/reporter-pa…/article22368549.ece

கருத்துகள் இல்லை: