

மாலைமலர் : அரசியலில் மும்முரம் காண்பித்து வரும் ரஜினிகாந்த், தனது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். #Rajinikanthpoliticalentry #RajiniForTamilNadu அரசியலில் மும்முரம்: உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கினார் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த், நேற்று அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இவருடைய இந்த அறிவிப்பு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

அனைவரையும் ஒருங்கிணைத்து குடைக்கீழ் கொண்டு வரவேண்டும். அதற்காக www.rajinimandram.org என்ற பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இதில் உங்களுடைய பெயர், வாக்காளர் எண், பதிவு செய்து உறுப்பினர்
ஆகலாம். தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ஆண்ட்ராய்டு செல்போனில் Rajini Mandram என்ற பெயரில் உள்ள செயலிலும் பதிவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக