மாலைமலர் : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க
அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் டி.டி.வி தினகரன் தரப்பில்
சமர்பிக்கப்பட்ட பென் டிரைவில் என்ன தகவல் உள்ளது? என்பது வெளியாகியுள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பல்வேறு சந்தேகங்களையும்,
சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
கமிஷனில், தினமும் ஏராளமானோர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார்கள்.
தங்களிடம் உள்ள ஆவணங்களையும் தாக்கல் செய்து வருகிறார்கள்.
சசிகலா உறவினரும், இளவரசியின் மகளுமான கிருஷ்ண பிரியா இன்று காலை சேப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பற்றி விளக்கம் அளித்தார்.
டிடிவி தினகரன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் சார்பில் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இன்று ஆஜராகி ஒரு பென் டிரைவை வழங்கி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் சார்பில் ராஜா செந்தூர்பாண்டியன் கொடுத்த பென்டிரைவில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் அடங்கிய 4 வீடியோக்கள் உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பென் டிரைவ் ஆதாரம், விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக