Shankar A :ஒக்கி புயலில் தமிழகத்தின் தென் பகுதி சீரழிந்தது.
மீனவர்கள் காணாமல் போனார்கள். மக்கள் பரிதவித்தார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு இயந்திரங்கள் இரண்டும் செயலலிழந்தது. லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தமிழர்தான். சென்னையில் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவி வெற்றி பெற்றுள்ளார்.
அவரை நாம் மக்கள் பிரச்சினைகளுக்காக நிதி கொடு என்று வற்புறுத்த முடியாது. அவர் உழைப்பு. அவர் பணம். நாம் யார் கேள்வி கேட்க ?
ஆனால், நடிகர் சங்கத்துக்கு இரண்டரை கோடி செக் அளிப்பதற்காக மலேசியா சென்று, ரஜினிகாந்த் அருகில் அமர்வதற்கு தனித் தொகை கொடுத்து, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இத்தனை செலவு செய்யும் இவர் ஏன் ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்கவில்லை என்ற கேள்வி நியாயம்தானே ?
உங்களிடம் பணம் இருக்கிறது. நீங்கள் பெரும் செல்வந்தர். உங்களோடு நடிகைகள் நடனமாடுவார்கள். உங்களோடு சூப்பர் ஸ்டார்கள் அமர்வார்கள். புகைப்படம் எடுப்பார்கள். உங்கள் வியாபாரம் செழிக்கும்.
புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணுக்கு தெரியாமல், கோடிகளை வாரிச் சுருட்டும் நடிகர்களின் சங்கத்துக்கு சர்வ சாதாரணமாக இரண்டரை கோடியை அள்ளி வீசும் உங்கள் கடைகளில் எதற்காக உழைப்பாளி மக்கள் தங்கள் பணத்தை செலவிட வேண்டும் ? உங்கள் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் வேறு எங்குமே கிடைக்காதா என்ன ?
உங்களைப் போல நடிகர் சங்கத்துக்கு இரண்டரை கோடி கொடுக்காத முதலாளிகள் கடைகளில் மக்கள் இனி பொருட்களை வாங்கட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக