நக்கீரன் :அதிமுகவினர் தோல்வி பயத்தினால் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர், ஆளும் அதிமுக அரசின் வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். இந்நிலையில், வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில், டிடிவி தினகரன் முதன்முதலாக சட்டப்பேரவையில் பேச இருக்கிறார்.
மன்னார்குடியில் உள்ள தட்டன்கோவில் குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திவந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம், ‘அதிமுகவினர் தோல்வி பயத்தால் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவையில் என்ன பேசப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்’ என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக