வெள்ளி, 5 ஜனவரி, 2018

ஆர் எஸ் எஸ் நாட்டை பாதுகாக்கிறது... உச்ச நீதிமன்ற Ex நீதிபதி கே,டி,தாமஸ் ...

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
thetimestamil :அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
“அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார்.
“பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் உடலை மேம்படுத்தும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை சொல்லித்தருவதை நான் வரவேற்கிறேன்.  ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் சமூகத்தின் மீதான தாக்குதல் நடக்கும்போது நாட்டை பாதுகாக்க பயன்படும் என நான் நம்புகிறேன்.

எவராவது என்னிடம் ஏன் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனக் கேட்டால், நான் சொல்வேன்…நாட்டுக்கு அரசியமைப்பு சட்டம் இருக்கிறது, ஜனநாயகம் இருக்கிறது, ராணுவம் இருக்கிறது. நான்காவதாக ஆர்.எஸ். எஸ். உள்ளது என சொல்வேன்” என்று பேசிய அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை கைவிட்டதாகவும் பேசியிருக்கிறார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
மேலும்,
“மதசிறுபான்மையினர் ‘மதசார்பின்மை’ என்பதை தங்களுடைய பாதுகாப்புகாக பயன்படுத்துகிறார்கள். ஆனால், மதசார்பின்மை என்பதற்கான பொருள் அதையும் கடந்தது. அதாவது ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் பாதுகாக்கக்கூடியது. ஒருவரின் கண்ணியம்,  பாகுபாடற்ற அணுகுமுறையுடன், சார்பற்று அமைய வேண்டும். மதசார்பின்மை என்பது ஒரு மதத்தை பாதுகாப்பது என தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது” என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பேசியுள்ளார். சிறுபான்மையினர் எப்போது அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள் என்றால், பெரும்பான்மையினருக்கு கிடைக்காததை தங்களுக்குள்ள உரிமைகளாக கோரும்போதுதான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
செய்தி ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை: