ஞாயிறு, 31 டிசம்பர், 2017

கரூர் மூன்று ஆட்டோகாரர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொலை ..

karurவெப்துனியா :கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணியை கொலை செய்த மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கரூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பர்வீன் பானு கடந்த 2015 ஆம் ஆண்டு  மாயமாகி உள்ளார். இதனையடுத்து இளையராஜா தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.போலீஸார் பர்வீனின் தொலைபேசி அழைப்புகளைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.கணவனை விட்டு ஓடிவந்த பர்வீனுக்கு சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களான ராஜா மற்றும் மாணிக்கம் என்பவர்களுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின், மறைமலை நகரில் வேறோருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ராஜா மற்றும் மாணிக்கத்துடன்  பர்வீன் தகராறு செய்த நிலையில் ஆத்திரத்தில் இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து நண்பர் கிஷோர் உதவியுடன் சடலத்தை கள்ளில் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர்.போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா மற்றும் மாணிக்கம் செய்த தப்பை ஒப்புக்கொண்டனர். ஒரு வருடம் கழித்து பர்வீனின் உடலை மீட்ட போலீஸார் ராஜா, மாணிக்கம் மற்றும் அவர்களுக்கு&உதவிய நண்பர் கிஷோர் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடா நட்பு கேடாய் <>விளையும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு

கருத்துகள் இல்லை: