நீங்கள் எல்லாம் சிஸ்டம் பற்றிப்பேசுவது, மாற்றங்களை கொண்டு வருவேன் என்பது எல்லாம் சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்திய பிஜேபி அரசை நீங்கள் வெளிப்படையாக, துணிச்சலாக விமர்சிக்காத வரை, தன்மானத் தமிழர்கள் யாரும் உங்களை ஏற்கவே மாட்டார்கள். ஆன்மிக அரசியலா? திராவிட அரசியலா? என்ன ஆன்மிக அரசியலா? உங்களை வைத்து மாடதிபதிகள் எல்லாம் அரசியல் சாணக்கியர் ஆகத் துடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
திராவிட அரசியல் என்பது எளிமையானது. வலிமையானது. வர்க்கப்பேதம் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. திராவிட அரசியலை பெரியாரும், அண்ணாவும், போதித்து இருக்கிறார்கள். பேசி இருக்கிறார்கள். அந்தத்தத்துவக்களும் போதனைகளுமே எங்களுக்கு போதுமானவை. மடாதிபதிகள் உங்களுக்கு போதித்த ஆன்மிக அரசியல் தத்துவங்கள் எங்களுக்கு தேவை இல்லை. அன்பின் பசி அல்ல, அதிகார பசி ரஜினி அவர்களே! உங்கள் இணையத்தள மக்கள் இணைப்பைப்பற்றி கேள்விப்பட்டேன். அருமை!
நீங்கள் என்ன புரட்சியாளரா மாற்றத்தை கொண்டு வர?
நீகள் ஒரு நடிகர் அவ்வளவு தான். ஆன்மிகம் என்ற போர்வையில் அதிகாரத்தை சுவைக்க விரும்புகிறீர்கள். . மக்கள் பிரச்சனைகள் போது அதிகாரத்திற்கு பயந்து வாய் மூடி மௌனியாக இருந்தவர்தானே நீங்கள். நீங்கள் தினமும் வழிபடும் பாபாவும் ஸ்ரீ ராகவேந்திராவும் சொன்னது அன்பின் பசி தானே தவிர, அதிகார பசி அல்ல. இரா காஜா பந்தா நவாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக