நக்கீரன் :லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு உள்ளிட்ட 17 பேரை குற்றவாளிகள் என டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்தது இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படுவதாக கூறியதை அடுத்து லாலு உள்ளிட்டோர் ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காணொளியில் 2400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அப்போது, லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக