சனி, 6 ஜனவரி, 2018

#THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப் படுத்தும் பா.இரஞ்சித்

மிக பெரிய பொருட்செலவில் அண்ணன் பா ரஞ்சித அவர்கள் நமக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் நாம் எந்த காரணமும் கூறாமல் அண்ணனின் இம்முயற்சி மாபெரும் வெற்றி அடைய சென்னை நோக்கி படையெடுப்போம் ...
அண்ணன் #பா_ரஞ்சித் அவர்களது முயற்சி மாபெரும் வெற்றியடைய அவருடன் கை கோர்ப்போம்..
#The_Casteless_Collective
// #மேடை_ரெடி #கலைஞர்கள்_ரெடி
உங்களை மகிழ்விக்க நாங்கள் ரெடி...!
மகிழ்ச்சியினுள் திளைத்தெழ நீங்க ரெடியா..!
சமூகநீதியற்ற சமூகத்தில், எல்லாத் தளங்களுக்குமான சமத்துவம் தேடி பயணிக்கும் நீலம் பண்பாட்டு மையத்தின் மற்றுமொரு புதியப்பயணம் தான் #THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப்படுத்தும் இந் நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பு.
இது அவர்கள் இசை, இவர்கள் இசை என களைந்து கிடக்கும் இசைகளை, சமத்துவத்தின் கீழ் ஒன்றிணைத்து அனைவருக்குமான இசையாய் தந்து, உங்களை மகிழ்விக்க #நீலம் #பண்பாட்டு #மையம் பெருமகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. வாருங்கள் கூடுவோம்♪பாடுவோம்♪ஆடுவோம்
அதிகாரம் நோக்கி குரல் எழுப்புவோம்.

கருத்துகள் இல்லை: