தினமலர் :ராஞ்சி : சிறையில் அதிகமாக குளிர்கிறது என கூறிய லாலுவிடம், குளிர்கிறது என்றால் தபோலாவோ, ஆர்மோனியமோ வாசியுங்கள் எனக் கடிந்து கொண்டார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிராத் யாதவ், 69, மற்றும், 15 பேருக்கு, நேற்று(டிச.,4) தண்டனை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அண்மையில் உயிரிழந்த வக்கீல் இருவருக்கு இரங்கல் தெரிவித்து கோர்ட் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று கோர்ட் அறையிலிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட வக்கீல்களை நீதிபதி சிவபால் சிங் வெளியேற்றினார். பின், லாலுவிடம், அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கும்படி பல பேரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தான் சட்டப்படி தீர்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் போன் செய்தவர்கள் குறித்த விவரங்களை நீதிபதி வெளியிடவில்லை. உடல்நலப்பிரச்னைகள் இருப்பதால் தண்டனையில் கருணை காட்டும்படி அவரது வக்கீல் வாதிட்டார்.
சிறையில் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும், சிறை அறை குளிர்கிறது எனவும் நீதிபதியிடம் லாலு குறை கூறினார். ‛கோர்ட்டிற்கு நீங்கள் வரும் போது தான் அனைவரையும் சந்திக்கிறீர்களே, பின் எதற்காக சிறையிலும் பார்க்க வேண்டும். சிறையில் அதிக குளிர் என்றால் தபேலாவோ, ஆர்மோனியமோ வாசியுங்கள்' என நீதிபதி பதிலளிக்க லாலு முகத்தில் ஈயாடவில்லை.
பின் நீதிபதியிடம் தான் நிரபராதி எனவும், இந்த வழக்கு தொடர்பாக எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் லாலு மன்றாடினார். இதற்கு நீதிபதி, ‛அப்போது நீங்கள்தான் பீகார் முதல்வர்; நிதித்துறையும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நேரத்துக்கு ஏற்றாற்போல நடிக்க வேண்டாம்' என்று கடிந்து கொண்டார்.
இந்நிலையில் லாலு மீதான கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரம் நாளை(ஜன.,6) மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். பீஹார் மாநிலம் கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கில் லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த வருடம் டிசம்பரில் ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக