செவ்வாய், 2 ஜனவரி, 2018

ரஜினிக்கு நாமல் ராஜபக்சா வாழ்த்து .. அரசியலுக்கு வருவது நல்ல செய்தி!

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.   சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல், ‘
எனது தந்தை ராஜபக்சேவுக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது நல்ல செய்தி. அவரது படங்களைப் போல் நிஜவாழ்விலும் நடக்காது என்று நம்புகிறேன். நல்லது செய்ததற்காக சிவாஜி படத்தில் அவர், சிறை சென்றதுபோல நிஜ வாழ்வில் பார்க்க நான் விரும்பவில்லை. அரசியலுக்கு அவரை நான் வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை: