சனி, 6 ஜனவரி, 2018

திராவிடத்தால் முன்னேறி செல்லும் தமிழகம் ,,, பந்தாட துடிக்கும் ஆரியம் .. இதுதான் உண்மை!

Ravi Raj : //திராவிடத்தால் தமிழகம் வீழ்ச்சியடைந்துவிட்டது.. மாற்றுக்கு மக்கள் ஏக்கம் -- அவாக்களின் இடைவிடா புலம்பல்//
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், மருத்துவ சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, கல்வித்துறையில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது???
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில், தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது??

திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, மேற்கத்திய நாடுகளில் அதிகளவு தமிழர்கள் கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்களில் பணியில் உள்ளார்கள்??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தமிழகத்தில் வேலை தேடி அலை அலையாக இந்தி பேசும் வட மாநில மக்கள் வருகிறார்கள்??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது ???
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது???
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் அதிகமாக உள்ளார்கள்??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகமாக உள்ளார்கள்??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன??
மொத்தத்தில் திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது??? எப்படி வட மாநிலங்களை விட முன்னேறிய நிலையில் உள்ளது?? எப்படி இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது????


இரா. தமிழ்க்காந்தன் : வடக்கே அகலரயில் பாதை முழுவதும் நிறைவு பெற்று விட்டது .ஆனால் தெற்கே தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.நான்கு வழிச்சாலையில் இடை யே வரும் ஊர்களுக்கு மேம்பாலம் அல்லது பூமிக்கு அடியிலோ பாலம் அமைத்து விபத்து நேராவண்ணம் சாலை வசதி செய்துள்ளனர் .இதிலும் தமிழகத்தில் குறைவுள்ளது. ரயில்வே வருமானம் தென்பகுதியிலே அதிகம். வடக்கே குறைவு

கருத்துகள் இல்லை: