வியாழன், 4 ஜனவரி, 2018

யானைகள் நலவாழ்வு முகாம்... ஷவர் குளியல்... பாதக்குளியல்...இது யானைகளுக்கான பிக்னிக்!


vikatan எம்.புண்ணியமூர்த்தி- தி.விஜய்: யானைகள் புத்துணர்வு முகாம் என்பது கோயில் யானைகளுக்கு பிக்னிக் மாதிரி என்று இந்து சயமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா  தெரிவித்தார்.;
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, “ 4-ம்தேதி, முதல் பிப்ரவரி 20-ம்தேதி வரை யானைகள் புத்துணர்வு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமிற்கு  மொத்தமாக  33  யானைகள் வர உள்ளன. அதில் 5 யானைகள் மடங்களுக்கு சொந்தமானவை. 2 யானைகள் புதுச்சேரியிலிருந்து வர இருக்கின்றன. மீதம் உள்ள யானைகள் அத்தனையும் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள யானைகள்தாம். மொத்தம் 48 நாட்களுக்கு நடக்க இருக்கிற முகாமில் இந்த யானைகளுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இயற்கை சூழல் நிறைந்த இந்தப் பகுதியில் முகாம் நடத்தப்படுவதால்  கோயில் யானைளுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். யானைகளைப் பொறுத்தவரைக்கும் இந்த புத்துணர்ச்சி முகாம் என்பது ஒரு பிக்னிக் மாதிரிதான். இந்த முகாமை யானைகள் ரொம்ப என்ஜாய் பண்ணும். வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் யானைகள் ஒரே இடத்தில் ஒன்று கூடும்போது பழைய தோஸ்துகளையெல்லாம் பார்த்த சந்தோஷம் யானைகளுக்கு கிடைக்கும்
கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கிருந்து  செல்லும்போது அத்தனை யானைகளும் புத்துணர்ச்சியோடு செல்கின்றன என்பதை இத்தனை வருட அனுபவத்தின் மூலம்  நாங்கள் உணர்ந்துள்ளோம். முகாமிற்கு வந்து புத்துணர்வு பெற்ற பிறகு இந்த யானைகள் கோயில் பணிகளை சிறப்பாக செய்ய தயராகிவிடும். இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், ரைஸ் பால், ஆகியவை கொடுக்கப்படும். யானைகள் குளிப்பதற்கென்றே பிரத்யேகமாக பவானி ஆற்றங்கரையில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் பாதங்களை பாதுகாக்க பாதக்குளியலுக்கான ஏற்பாடும் செய்திருக்கிறோம். அதுமட்டுமல்லாது யானைகளின் உடல்நிலையை பரிசோதிக்க வனத்துறை மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
யானைகளின் உடல்நலனில் ஏதேனும் கோளாறு இருந்தால் உடனடியாக அதைச் சரி செய்ய அந்த மருத்துவக்குழு தயாராக உள்ளது. என்றவர், கோவில் யானைகள் முகாமிற்கு வந்துள்ளதால் முகாமைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலிருக்கும்  காட்டு யானைகள் முகாமை நோக்கி வர வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக முகாமைச் சுற்றி தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படிருக்கின்றன. காட்டு யானைகளுக்கும் கோயில் யானைகளுக்கும் எந்த விதமான மோதல்களும் வந்துவிடக்கூடாது என்று தெளிவாக திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்

கருத்துகள் இல்லை: