வெள்ளி, 5 ஜனவரி, 2018

கந்துவட்டியும் நட்சத்திர நடிகர்களும் கூட்டு களவாணிகள் ... நல்ல திரைப்படங்களின் எதிரிகள் இவர்கள்தான்

வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’Ashok-kumar-22_11_12394 வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ Ashok kumar 22 11 12394வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!
 ‘பண ரீதியான’ பாதுகாப்பைப் பெறுவதுதான் ஒரு தயாரிப்பாளரின் முதல் திட்டமிடலாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழ்சினிமா சூழலில் அது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது. புதிதாக வரும் தயாரிப்பாளருக்கு சினிமாவின் சந்தை தெரிவதில்லை, தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளும் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருக்கிறது, வெளியிடுவதில் பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது… என நீளும் புகார் பட்டியலிலுக்கு இடையில்தான், தமிழ்சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது, தயாரிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 ஒரு திரைப்பட உருவாக்கத்தின் ஆதாரமையமே தயாரிப்பாளர்தான். ஆனால், கந்துவட்டிப் பிரச்னையில் ஆரம்பப் புள்ளியே அவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது’ என்கிறார், இயக்குநர் ஒருவர். “இங்கே இருக்கும் பல தயாரிப்பாளர்களிடம் பணம் இருப்பதில்லை. சினிமாவில் பல வருடம் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பவர்கள்தான், தயாரிப்பாளர்களாக உருவெடுக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சினிமா உத்திகள், வியாபாரம் எல்லாமே தெரியும். சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் சிலர் மட்டுமே இங்கே சொந்தமாக முதலீடு செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


நல்ல கருத்துள்ள படங்களை அவர்கள் தயாரிக்கும் பட்சத்தில் தப்பித்துக்கொள்ளலாம். இல்லையெனில் சிரமம்தான்… இங்கே, தயாரிப்பாளர் எனப்படுபவர் பணத்தை முதலீடு செய்பவராக மட்டும் இருந்தால் பிரச்னை இல்லை. அவரே ‘ஒரு குத்துப்பாட்டு இருந்தால்தான் படம் ஓடும்’, ‘இதுபோன்ற ஒரு காட்சி இருந்தால், படம் ஓடாது’ எனக் கருத்து சொல்லி, கதையை மாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

தவிர, பணம் இல்லாமல் ஃபைனான்ஸ் பெற்றுப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள்தான் இங்கே அதிகம். வட்டிக்குப் பணம் வாங்குகிறார்கள், படம் எடுக்கிறார்கள், அந்தப் படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க சிரமப்படுகிறார்கள், ரிலீஸ் செய்ய முட்டி மோதுகிறார்கள், கடைசியில்… கந்துவட்டிக் கொடுமையில் சிக்கி நிற்கிறார்கள்.

இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக, ஒரு படத்தைக் கமிட் செய்து, அதற்கான சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் எனப் பலவிதமான சினிமா சந்தையில் படத்திற்கான விலை பேசி, குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு, அந்தப் பணத்தில் படத்தைத் தொடங்குகிறார்கள். இந்த வழிமுறை எளிமையாக இருந்தாலும், எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் இது சாத்தியம் ஆகாது. எனவே, ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதில் முறையான திட்டமிடல் இருந்தால் மட்டுமே, தயாரிப்பாளரின் தலை தப்பிக்கும்.

ஆனால், தமிழ்சினிமாவில் அந்த ‘திட்டமிடல்’ என்பது என்ன நிலையில் இருக்கிறது என்பதை, தயாரிப்பாளர் – நடிகர் இடையேயான மோதல்களை ‘பிரேக்கிங் நியூஸா’கப் பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம்” என்கிறார், அவர். ”கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுக்கலாம். ஆனால், அதை முறையாக திருப்பித் தரும் வழிகள் நமக்கு இருக்கிறதா… என்ற கேள்வியை ஒவ்வொரு தயாரிப்பாளரும் உணர்ந்தாலே, பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்” என்கிறார், மற்றொரு இயக்குநர்.

 வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’

”அன்புச்செழியன் விவகாரத்தில் அவர்மீது இத்தனை சர்ச்சைகள் எழக் காரணம், பணத்தை வாங்குவதில் அவர் கடைபிடிக்கும் அணுகுமுறை மட்டும்தான்.” என்றவர், அவருடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் விவரித்தார். ” ‘தமிழிலேயே இங்கிலீஷ் படம் எடுப்பவர்’ எனப் பெயரெடுத்த இயக்குநர் அவர். தன் படத்திற்கு அன்புச்செழியனிடம் பணம் பெற்றுக்கொண்டு, பெரிய நடிகர் ஒருவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் கிளம்பவிருக்கிறார்.

 ‘ஹீரோயின் யார்?’ என்ற கேள்வி, அன்புச்செழியன் தரப்பில் இருந்து வருகிறது. ‘புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்’ என்கிறார், இயக்குநர். ‘நான் கொடுத்த பணத்துக்கு, பெரிய ஹீரோயினைப் படத்துல பயன்படுத்துனா மட்டும்தான், போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியும்’ என அட்வைஸ் கொடுத்தவர், இயக்குநர் அதை உதாசீனப்படுத்திய பிறகு, கட்டாயப்படுத்தி, டாப் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யவைத்திருக்கிறாராம்.

 படத்தில் யார் நடிக்கவேண்டும் என்பது வரை… அவருடைய தலையீடு நீளுவதால்தான், பிரச்னைகள் வெளியேவரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார்.


அதேசமயம், ‘விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர், அன்புச்செழியனுக்கு ஆதரவாகத்தானே பேசியிருக்கிறார்கள். பிறகு எப்படி கந்துவட்டிப் பிரச்னையில் அன்புச்செழியன் மட்டுமே குற்றவாளி ஆவார்?’ என்ற கேள்வியை முன்வைத்தேன். கந்துவட்டி தொடர் “விஜய் ஆண்டனிக்கு தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அவர் ஒரு படத்திற்குப் பெரும் கடன், இரு படங்களுக்கான வருமானத்தைக் கொடுக்கும். தவிர, கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர் கடன் பெற்றுப் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சில வருடம் கழித்து, அவர் சசிகுமார் இடத்தில் இருந்து பேசும் சூழல் வரலாம்…” என்கிறார், அந்த இயக்குநர்.

‘எல்லோரும் ஏன் அன்புச்செழியனிடம் கடன் வாங்கவேண்டும்?’ என்ற கேள்விக்குப் பின்னால் இருக்கும் பதில் ஒன்றுதான். சேட்டுகளிடன் கடன் பெற்றுப் படம் எடுக்கும் சூழல் இங்கே இருந்தாலும், அவர்களிடம் கடன் பெறும்போது, உத்திரவாதத்திற்கு சொத்து, நிலம், பத்திரம் எனப் பலவற்றைக் கொடுக்கவேண்டும்.

ஆனால், அன்புச்செழியன் ‘பிரபலமான முகம்’ என்பதை மட்டுமே உத்திரவாதமாகக் கொண்டு கடன் கொடுத்துகொண்டிருக்கிறார். தமிழ்சினிமா பிரபலங்கள் யாரும், எந்நேரமும் அவரிடம் கடன் பெறலாம். உடனடியாகக் கிடைக்கும்… எனப் பல வசதிகள் அன்புச்செழியன் தரப்பில் இருக்கிறது. தவிர, கடன் கொடுத்தவர், திருப்பிக் கேட்க சில தவறான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்றால், அவரிடம் ஏன் கடன் பெறவேண்டும்?’ என்பதையும் தயாரிப்பாளர்கள் யோசிக்கவேண்டும்.

இங்கே திரும்பத் திரும்ப முன்வைக்கப்படும் ஒரு விஷயம், ‘தயாரிப்பாளர்களிடம் இல்லாத திட்டமிடல்’ என்ற வாதம்தான். அந்தத் திட்டமிடல் இருந்தால், கடன் வாங்கிப் படம் எடுத்தாலும் அதை பாஸிட்டிவாகக் கையாள முடியும். திட்டமிடல் என்பது, வெறும் வார்த்தை அல்ல… உழைப்பு. திரைப்படத்திற்கான பூஜைக்கு இவ்வளவு செலவு, ஷூட்டிங் இத்தனை நாட்கள்தான் நடந்தவேண்டும், படத்திற்கான சந்தையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்,

 நடிகர், நடிகைகளுக்கான சம்பளத்தை தவணை முறையில் கொடுக்கவேண்டும், ‘கால்ஷீட்’ என்ற நடைமுறையை இங்கே ‘முறை’யாகக் கையாளவேண்டும், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ், ஃபாரீன் ரைட்ஸ் என வெளிச்சந்தைக்கான வாய்ப்புகளைப் படம் தொடங்கும்போது அல்லது பப்ளிசிட்டியின்போதே முடித்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

 விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்காமல், அந்தப் படத்திற்கான ரசிகர்களைக் கண்டறிந்து, முதலில் அவர்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும்… என அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தால் மட்டுமே, ஒரு திரைப்படத்திற்கான வியாபாரம் முழுமையாக இருக்கும்,

ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘பண ரீதியான’ பாதுகாப்பைப் பெறுவார். இந்த நடைமுறைகள் எல்லாம் பாலிவுட் சினிமாவில் கச்சிதமாக நடந்துகொண்டிருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் அந்தத் ‘திட்டமிடல்’ கோலிவுட்டிலும் சாத்தியமானால், கந்துவட்டிப் பிரச்னை மட்டுமல்ல, இன்னும் பல பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும். ..இலக்கியாஇன்போ .காம் 

கருத்துகள் இல்லை: