ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நெற்பயிரை அழித்த டி எஸ் பியின் அக்கிரமம்,,,, விவசாயி கண்ணீர் ....

Special Correspondentநெல் ஸ்பெல்கோ : வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவ்வீடியோவில் ''நெல் வயலை அழிக்க வேண்டாம்....'' கதறியபடி டிராக்டருக்கு நடுவே பெண் விவசாயி விழும் காட்சி பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய வீடியோவில் டி.எஸ்.பி ஜெரீனா பேகம், 'உன் கையை ஒடித்துவிடுவேன்... ' என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து "நெற்பயிரை அழிப்பது, அநியாயம்... உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் பெற்றது.
இதுதொடர்பாக இன்று சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வழக்கு நிலுவையில் இருக்கும்போது டி.எஸ்.பி ஜெரீனா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கச் செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து டி.எஸ்.பி ஜெரீனா பேகம் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில், துணை காவல் கண்காணிப்பாளர் நெல் வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பிய சமூக ஆர்வலர்கள் தங்கள் வெற்றிக்கு கிடைத்த பரிசாக டி.எஸ்.பி ஜெரீனா சஸ்பென்ஷன் கிடைக்குமா என்று பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.


விகடன் :துரை.நாகராஜன்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில், துணை காவல் கண்காணிப்பாளர் நெல் வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ''நெல் வயலை அழிக்க வேண்டாம்....'' கதறியபடி டிராக்டருக்கு நடுவே பெண் விவசாயி விழும் காட்சி மனதை உருக்கும் விதமாக இருந்தது.
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய வீடியோவில் டி.எஸ்.பி ஜெரீனா பேகம், 'உன் கையை ஒடித்துவிடுவேன்... ' என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, "நெற்பயிரை அழிப்பது, அநியாயம்... உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதைப் பசுமை விகடன் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தோம்.
நீதிபதி
இதுதொடர்பாக இன்று சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வழக்கு நிலுவையில் இருக்கும்போது டி.எஸ்.பி ஜெரீனா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கச் செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து டி.எஸ்.பி ஜெரீனா பேகம்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
நெல்வயல் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக டிராக்டரை ஓட்டிய சதாசிவம் மற்றும் நில உரிமை கோரும் சாமுண்டீஸ்வரி ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருவர் தலைமறைவாகியுள்ளனர். முன்னரே டி.எஸ்.பி ஜெரீனா பேகம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: